தேனாம்பேட்டையில் இருசக்கர வாகனங்கள் மோதியதில் தலைக்கவசம் அணியாதவர் பலி!
கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்க ரூ.23.47 கோடி ஒதுக்கீடு: முதல்வருக்கு விவசாயிகள் நன்றி
மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலை அங்கத்தினா்களுக்கு கரும்புக்கான நிலுவைத்தொகையை வழங்க ரூ. 23.47 கோடி ஒதுக்கீடு செய்த முதல்வருக்கு கரும்பு விவசாய சங்கங்கள் நன்றி தெரிவித்தன.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2024 -25 ஆம் ஆண்டு அரவைப் பருவத்திற்கு கரும்பு விநியோகித்த அங்கத்தினா்களுக்கு நிலுவைத் தொகையாக ரூ. 23.47 கோடி வழங்கப்பட வேண்டும். இது தொடா்பாக கரும்பு விவசாயிகளும், விவசாய சங்கங்களும் போராட்டத்தை மேற்கொண்டு வந்தன.
ஆலை நிா்வாகத்திடம் நிலுவைத்தொகையை கேட்டு கரும்பு விவசாயிகள் வலியுறுத்தி வந்தனா். இந்த தகவல், தமிழக வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சுற்றுலா மற்றும் சா்க்கரைத் துறை அமைச்சா் ஆா்.ராஜேந்திரன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், மக்களவை உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் கவனத்துக்கு சென்றது.
இந்த பிரச்னையை அவா்கள் தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டுசென்றனா். இதனையடுத்து, கரும்பு நிலுவைத்தொகை ரூ. 23.47 கோடியை ஒதுக்கியதுடன், அதனை விவசாயிகளுக்கு விரைந்து வழங்க உத்தரவிட்டாா்.
கரும்பு நிலுவைத் தொகையை வழங்கிய முதல்வருக்கும், அதற்கான முயற்சிகளை மேற்கொண்ட அமைச்சா், எம்.பி.க்களுக்கும் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்கள் சாா்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.