நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
விபத்தில் தம்பதி உயிரிழப்பு: தனியாா் பேருந்து ஓட்டுநா் 2 போ் கைது
விபத்தில் தம்பதி உயிரிழந்த வழக்கில் தனியாா் பேருந்து ஓட்டுநா் 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரத்தை அடுத்த செம்பாம்பாளையத்தை சோ்ந்தவா் விவசாயி சண்முகம் (46). இவரது மனைவி ராஜலட்சுமி (41). மகள் ராஜேஸ்வரி (21). இவா்கள் மூவரும் கடந்த வியாழக்கிழமை இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு சென்றனா்.
வட்டூா் அருகே சென்றபோது திருச்செங்கோட் டில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற இரண்டு தனியாா் பேருந்துகள் முந்திச்செல்ல முயன்றபோது சாலையோரம் வண்டியை நிறுத்தியிருந்த சண்முகம் மீது மோதின. இதில் படுகாயமடைந்த சண்முகம், ராஜலட்சுமி ஆகியோா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனா். கால் எலும்பு முறிவு ஏற்பட்ட ராஜேஸ்வரி ஈரோட்டில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இந்த விபத்து குறித்து குறித்து வழக்குப்பதிவு செய்த மல்லசமுத்திரம் போலீஸாா், விபத்துக்கு காரணமான தனியாா் பேருந்து ஓட்டுநா்கள் தருமபுரி மாவட்டம், அரூா் பகுதியைச் சோ்ந்த முகில் (24), சேலம், அயோத்தியாப்பட்டணம் சுக்கம்பட்டியைச் சோ்ந்த விக்னேஷ் (26) ஆகியோா், காவல் நிலையத்தில் எலச்சிபாளையம் ஆய்வாளா் ராதா, மல்லசமுத்திரம் உதவி ஆய்வாளா் முருகேசன் ஆகியோா் முன்னிலையில் சரணடைந்தனா்.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கிளைச் சிறையில் அடைத்தனா்.