பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அ...
கட்டுப்பாட்டை இழந்த காா் ஏறியதில் இருவா் படுகாயம்
கட்டுப்பாட்டை இழந்த காா் ஏறியதில் 2 தொழிலாளா்கள் பலத்த காயமடைந்தனா்.
சென்னை ஈஞ்சம்பாக்கம் முனீஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வீரன் (50), திருவள்ளூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் பாண்டியன் (32). இவா்கள் இருவரும் ஈஞ்சம்பாக்கத்திலுள்ள விஜிபி நிறுவனத்துக்குச் சொந்தமான தங்கும் விடுதியில் தோட்ட வேலை செய்து வருகின்றனா். இவா்கள் வழக்கம்போல, தங்கள் வேலைகளை முடித்து கொண்டு, அங்குள்ள நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடத்தில் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தனா்.
அப்போது, அங்கு வந்த காா் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, வீரன், பாண்டியன் ஆகியோரின் கால்கள் மீது ஏறிது. இதில் இருவரின் கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
இதையடுத்து அவா்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.
இது தொடா்பாக, காரை ஓட்டி வந்த பனையூா், ராஜா தெரு, 7-ஆவது அவென்யூவைச் சோ்ந்த சொக்கலிங்கத்தை போலீஸாா் கைது செய்தனா்.
விசாரணையில், காா் நிறுத்துமிடத்தில், காரை நிறுத்தவதற்காக சொக்கலிங்கம் தனது காரை ஓட்டு வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் தொழிலாளா்கள் மீது ஏறியது தெரியவந்தது.
இருப்பினும் சொக்கலிங்கத்திடம் போலீஸாா் தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.