செய்திகள் :

``இந்த வெற்றிக்குக் காரணம்..'' - ஆப்ரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடியின் மன்கிபாத் உரை!

post image

`ஆபரேஷன் சிந்தூர்'-க்குப் பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று `மன் கி பாத்' நிகழ்ச்சியின் மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

இந்த உரையின்போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் (PoK) இந்திய ஆயுதப் படைகளால் அழிக்கப்பட்ட தளங்களின் படங்களை காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், ``எல்லையைத் தாண்டிய பயங்கரவாத உள்கட்டமைப்பை இந்தியப் படைகள் தாக்கியது அசாதாரணமானது.

operation sindoor
Operation Sindoor - ஆபரேஷன் சிந்தூர்

பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில், ஆபரேஷன் சிந்தூர் புதிய நம்பிக்கையையும் சக்தியையும் செலுத்தியுள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் நமது உறுதி, தைரியத்துக்கான இந்தியாவின் படம். இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமைக்கான தெளிவான அடையாளம். இன்று முழு நாடும் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றுபட்டுள்ளது.

'ஆத்மநிர்பர் பாரத்' உணர்வைப் பின்பற்றி, இந்தியாவின் உள்நாட்டில் வளர்க்கப்பட்ட பாதுகாப்புத் திறன்களே, இந்த வெற்றிக்குக் காரணம்.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் சக்தியால் நமது வீரர்களால் நிகழ்த்தப்பட்ட துணிச்சல் இது." எனப் பாராட்டியிருக்கிறார்.

`நிதி ஆயோக் கூட்டத்திற்கு சென்ற முதல்வரை பாராட்டுகிறேன்; விஜய் குழப்பத்தில் உள்ளார்..' - ஹெச்.ராஜா

புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன் கோயிலில் கும்பாபிஷேக திருப்பணியை பார்வையிட்ட பா.ஜ.க தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர்,"தமிழகத்தில் இருக்கும் அரசு ஊழல... மேலும் பார்க்க

US: ``நான் எதிர்க்கட்சிக்காக வேலை செய்கிறேன், ஆனால்..'' - அமெரிக்காவில் சசி தரூர் பேசியது என்ன?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக நடத்தப்பட்ட `ஆபரேஷன் சிந்தூர்' பற்றி உலக நாடுகளுக்கு விளக்கும் நோக்கில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர் தலைமையில் மத்திய பா.ஜ.க அரசு அனைத்துக் கட்சிக் குழு அமைத்... மேலும் பார்க்க

Pahalgam attack: ``பெண்களிடம் வீரம் இல்லை..'' - பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சித்த பாஜக எம்.பி

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்ட பெண்களை விமர்சிக்கும் விதமாக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களுக்... மேலும் பார்க்க

Kodaikanal Flower Show: 60 ஆயிரம் மலர்களால் அலங்காரம்; பூத்து குலுங்கிய செடிகள் | Photo Album

கோடை விழா மலர் கண்காட்சிகோடை விழா மலர் கண்காட்சிகோடை விழா மலர் கண்காட்சிகோடை விழா மலர் கண்காட்சிகோடை விழா மலர் கண்காட்சிகோடை விழா மலர் கண்காட்சிகோடை விழா மலர் கண்காட்சிகோடை விழா மலர் கண்காட்சிகோடை விழ... மேலும் பார்க்க

Smoothy: நாம் ஏன் ஸ்மூத்தீஸ் அருந்த வேண்டும்? செய்முறையும் பலன்களும்!

`ஸ்மூத்தி' வெயில், மழை, குளிர் என அனைத்து காலங்களுக்கும் ஏற்றது. பழங்களை ஜூஸாகக் குடிப்பதைவிட ஸ்மூத்தியாகச் செய்து அருந்தும்போது, முழுப் பலனைப் பெறலாம்.ஸ்மூத்தியில், இரண்டுக்கும் மேற்பட்ட பழங்கள், உலர... மேலும் பார்க்க