செய்திகள் :

பனைக்கனவுத் திருவிழா: "கள் அருந்தினால் தோல் மினுமினுப்பாக மாறிவிடும்" - சீமான் பேச்சு

post image

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி வட்டம் பூரிகுடிசை அருகே அமைந்துள்ளது நரசிங்கனூர் கிராமம். இப்பகுதியில் உள்ள பனையேறிகள் வெகு நாட்களாக கள்தடை நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி போராடி வருகின்றனர். இந்நிலையில் மே 24ம் தேதியில் தமிழ்நாடு பனையேரிகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனை கனவுத் திருவிழா 2025 நடைபெற்றது.

சீமான் பேச்சு

வெகு விமரிசையாக நடைபெற்ற திருவிழாவில் கருத்தரங்கம், நடனம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன. பல ஆயிரம் மக்கள் கலந்துகொண்ட விழாவின் ஒரு பகுதியாக விழா மேடையில் உரையாற்றினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

"தமிழரின் தேசிய மரமே பனைமரம் தான். ஆனால் இதுவே இங்கு அற்பப் பொருளாக பார்க்கப்படுகிறது.

பனைமரம் மூலமாக 840 வகையான பயன்கள் கிடைக்கின்றன. மைதாவிற்கு பதிலாக பனை மாவினைப் பயன்படுத்தலாம். பனை ஏறுவது ஒரு தொழில் அல்ல அது ஒரு வாழ்வியல்.

பனை மரம்

ஒரு நாட்டின் வேளாண் குடிமகன் வாழ்கிறான் என்றால் அந்த நாடு வளர்கிறது என்று பொருள். ஒரு குடிமகன் வாழ முடியாமல் சாகிறான் என்றால் அந்த நாடு நாடல்ல சுடுகாடு என்று பொருள். இன்று வேளாண் குடிமகன் சாவது என்பது செய்தி ஆனால் அவை பிற்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படப் போகிறது என்பதற்கான முன்னறிவிப்பு.

கள் உணவில் ஒரு பகுதி இதனைக் குடித்து இறந்தவன் ஒருவர் கூட கிடையாது. பத்து நாட்கள் தொடர்ந்து கள் அருந்தினால் தோல் மினுமினுப்பாக மாறிவிடும். இது ஒரு திருவிழா மட்டுமல்ல உரிமை கோரும் விழா.

இது பனையேறிகளுக்கான பிரச்னை மட்டுமல்ல நம் பரம்பரைக்கான பிரச்னை. விரைவில் இதே இடத்தில் பனை சார்ந்த தொழிற்சாலைகள் உருவாக்கப்படும் இங்கு அரசு பணி கொடுக்கப்படும். ரேஷன் கடையில் வெள்ளை சர்க்கரைக்குத் தடை விதிக்கப்படும், அதற்கு பதிலாக நாட்டுச் சர்க்கரை வழங்கப்படும். குறிஞ்சி மருதம் நெய்தல் அங்கன்வாடிகளை அரசே நிறுவும்". எனப் பேசினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``சார்கள், தம்பிகளின் ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது" - எல்.முருகன் கொதிப்பு

மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எல். முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பினாமிகளின் ஆட்சி நடக்கிறது. ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா அல்லது இந்தத் தம்ப... மேலும் பார்க்க

'பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்' - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் த... மேலும் பார்க்க

"சாதியை, சாதிய முரணை ஒழிப்பதற்கு ஆளுநர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்?' - தொல்.திருமாவளவன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையம் வ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: "ED-க்கு மட்டுமல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்" - உதயநிதி ஸ்டாலின்

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு நேரில் பார்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

Vijay: 'குடும்பத்துக்கு ஆபத்து வருமென அச்சமா முதல்வரே?' - திமுகவை கடுமையாக சாடும் விஜய்

'முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றதையும் டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறையின் ரெய்டையும் தொடர்புப்படுத்தி தவெக தலைவர் விஜய் தி... மேலும் பார்க்க

'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!

கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு... மேலும் பார்க்க