செய்திகள் :

``சார்கள், தம்பிகளின் ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது" - எல்.முருகன் கொதிப்பு

post image

மத்திய இணை அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான எல். முருகன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் பினாமிகளின் ஆட்சி நடக்கிறது. ஆட்சியை நடத்துவது முதலமைச்சரா அல்லது இந்தத் தம்பிகளா என்ற சந்தேகம் எழுகிறது. முதலில் இந்தத் தம்பிகள் யார்.

எல்.முருகன்

அவர்களுக்கு அதிகாரத்தை கொடுத்தது யார். அரசு அதிகாரிகளுக்கே உத்தரவு போடுமளவுக்கு தைரியம் எங்கிருந்து வந்தது. இது மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசு என்பதை மறந்து, இந்தத் தம்பிகள் தமிழகத்தைச் சுரண்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த வேண்டிய நிதியில் ஊழல் செய்து, தங்களின் சொந்த லாபத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். இந்தத் தம்பிகளுக்கும், திமுக குடும்பத்துக்கும் என்ன தொடர்பு? அவர்களை இயக்குவது யார். இந்தத் தம்பிகள் யார் என்று மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கவேண்டும்.

முதலமைச்சர் ஸ்டாலின்

அரக்கோணத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. பொள்ளாச்சி வழக்கைப்போல அரக்கோணம் வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு  மாற்றவேண்டும். தமிழகத்தில் சார்கள் மற்றும் தம்பிகளின் ஆட்சிதான் நடக்கிறது. 

முதலமைச்சர் தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் பற்றி சிந்திக்கவில்லை. ஆட்சி முடியும் நேரத்தில் ஒரு அரசியல் ஸ்டண்ட் எடுப்பதற்காக டெல்லி சென்றுள்ளார். அதிகாரத்தின் மூலம் நாங்கள் யாரையும் அடிபணிய வைக்க வேண்டிய அவசியம் இல்லை. பாஜக உலகத்தின் மிகப்பெரிய கட்சியாகும்.

பாஜக
பாஜக

உலகளவில் அதிக உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் ஒரே கட்சி பாஜக தான். பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்தியாவின் 80 சதவிகிதம் நிலப்பரப்பில் ஆட்சியில் உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்.” என்றார்.

'பயமில்லை என்றால் உங்கள் தம்பி ஏன் வெளிநாடு ஓடினார்' - உதயநிதிக்கு எடப்பாடி பழனிசாமி கேள்வி

அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டுகளாக பிரதமர் த... மேலும் பார்க்க

"சாதியை, சாதிய முரணை ஒழிப்பதற்கு ஆளுநர் என்ன திட்டம் வைத்திருக்கிறார்?' - தொல்.திருமாவளவன்

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் திருச்சி விமான நிலையம் வ... மேலும் பார்க்க

பனைக்கனவுத் திருவிழா: "கள் அருந்தினால் தோல் மினுமினுப்பாக மாறிவிடும்" - சீமான் பேச்சு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவண்டி வட்டம் பூரிகுடிசை அருகே அமைந்துள்ளது நரசிங்கனூர் கிராமம். இப்பகுதியில் உள்ள பனையேறிகள் வெகு நாட்களாக கள்தடை நீக்கம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து வலியுறுத்தி போராடி... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: "ED-க்கு மட்டுமல்ல, மோடிக்கும் நாங்கள் பயப்பட மாட்டோம்" - உதயநிதி ஸ்டாலின்

புதுக்கோட்டையில் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பல்நோக்கு உள் விளையாட்டு அரங்கை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களோடு நேரில் பார்வையிட்டு ஆய்வு ... மேலும் பார்க்க

Vijay: 'குடும்பத்துக்கு ஆபத்து வருமென அச்சமா முதல்வரே?' - திமுகவை கடுமையாக சாடும் விஜய்

'முதல்வர் ஸ்டாலின் டெல்லி பயணம்!'தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள டெல்லி சென்றதையும் டாஸ்மாக் தொடர்பான அமலாக்கத்துறையின் ரெய்டையும் தொடர்புப்படுத்தி தவெக தலைவர் விஜய் தி... மேலும் பார்க்க

'கொலை மிரட்டல் விடுத்தவரை கண்டறியாமல் விளம்பரப்படுத்துவதா?' - வேலுமணி வருத்தம்!

கோவை அதிமுக அலுவலகத்தில் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது வேலுமணி செய்தியாளர்களுக்கு... மேலும் பார்க்க