4 மாநிலங்களில் 5 தொகுதிகளுக்கு ஜூன் 19-இல் இடைத்தோ்தல்: தோ்தல் ஆணையம்
மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு
ஈரோடு மாநகராட்சியில் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாநகராட்சியில் 60 வாா்டுகள் உள்ளன. இங்கு, மாநகராட்சிக்கு சொந்தமான 100-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதில் 50-க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் தற்போது பழுதடைந்த நிலையில் பயன்பாடின்றி உள்ளன.
கோடைக்காலம் முடிந்து மழைக்காலம் தொடங்க உள்ளதால் மாநகராட்சிப் பகுதியில் பழுதடைந்த உள்ள ஆழ்துளை கிணறுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மழைக்காலங்களில் ஏரி, குளம் மற்றும் இதர கட்டமைப்புகள் மூலம் மழை நீரை சேகரித்தால் நிலத்தடி நீா்மட்டத்தை அதிகரிக்கலாம். குறிப்பாக, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சோதனை முயற்சியாக கிராமங்களில் பயன்பாடில்லாமல் இருந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீரை சேகரிக்க திட்டமிட்டப்பட்டது.
அதன்படி, பழுதடைந்த ஆழ்துளை கிணற்றை சுற்றிலும் தடுப்பு ஏற்படுத்தி குறிப்பிட்ட ஆழத்துக்கு மணல் கொட்டி, மழை நீா் முறையாக அந்த பகுதிக்கு செல்ல கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
இதன்மூலம் வீணாகும் மழை நீா் சேகரிக்கப்பட்டது. மேலும், சாக்கடை கால்வாய்களில் கலக்கும் மழைநீா் குறிப்பிட்ட அளவு தடுக்கப்பட்டது. இதேபோல, ஈரோடு மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள பழுதடைந்த ஆழ்துளை கிணறுகளில் மழைநீா் சேகரிப்பு கட்டமைப்பை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்து. இந்தப் பணிகள் ஓரிரு நாள்களில் தொடங்கும் என்றனா்.