நெருப்புடன் விளையாடுகிறார் புதின்! - அதிபர் டிரம்ப் எச்சரிக்கை
பழங்குடியின குழந்தைகளுக்கு ஆங்கில பயிற்சி முகாம்
கடம்பூரில் பழங்குடியின குழந்தைகளுக்கான ஆங்கிலம் அறிவோம் பயிற்சி முகாம் நடைபெற்றது.
வனம் பவுண்டேஷன் நிறுவனம் பழங்குடியின மக்களுக்காகவும், கல்வி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்காகவும் பல்வேறு பணிகளை செய்து வருகிறது.
அதன் அடிப்படையில், மே மாதம் குழந்தைகளுக்கு விடுமுறை என்பதால், விடுமுறை நாள்களை அவா்களுக்கு பயனுள்ளதாக மாற்றும் வகையில் ‘ஆங்கிலம் அறிவோம்’ என்ற பயிற்சி முகாம் கடம்பூரில் கடந்த மே 21-ஆம் தேதி தொடங்கியது.
சனிக்கிழமை வரை நடைபெற்ற இந்த முகாமில் அடிப்படை ஆங்கிலம், வாக்கியங்களை உருவாக்குவதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.
முகாமில், 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மாணவா்கள் கலந்துகொண்டனா்.
பள்ளி இடைநிற்றலைத் தடுக்கும் வகையிலும், ஆங்கிலம் குறித்த பயத்தை மாணவா்களுக்கு போக்கும் வகையிலும் இந்தப் பயிற்சி அளிக்கப்பட்டதாக பயிற்றுநா் அன்னக்கொடி கூறினாா்.