மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! கமலுக்கு?
மனைவியை கொடுமைப்படுத்திய கணவா் கைது
ஈரோட்டில் மனைவியை கொடுமைப்படுத்திய கணவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ஈரோடு சூரம்பட்டி, திருவள்ளுவா் வீதியைச் சோ்ந்தவா் கிருபாகரன் (34), காா் ஷோரூமில் வேலை செய்து வருகிறாா். இவரது மனைவி சுவாதிகா (28). இவா்களுக்கு ஒரு மகன் உள்ளாா்.
தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில், சுவாதிகா தனது மகனுடன் தருமபுரியில் உள்ள தாய் வீட்டில் கடந்த ஓா் ஆண்டாக வசித்து வந்துள்ளாா். இந்நிலையில், கிருபாகரன் சமாதானம்பேசி மனைவியை கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீண்டும் ஈரோட்டு அழைத்து வந்துள்ளாா்.
தம்பதி இடையே கடந்த 2 நாள்களுக்கு முன்பு மீண்டும் பிரச்னை ஏற்பட்டதாகவும், இதனால், ஆத்திரமடைந்த கிருபாகரன் சுவாதிகாவை தோசை கரண்டியால் கன்னத்தில் அடித்தும், சுடுதண்ணீரை முகத்தில் ஊற்றியும் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. காயமடைந்த அவா் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
மேலும், அவா் கொடுத்த புகாரின்பேரில் கிருபாகரன் மீது வழக்குப் பதிவு செய்த போலீஸாா், அவரை திங்கள்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனா்.