என்னுடன் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்கத் தயாரா? - மோடிக்கு மமதா கேள்வி
மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு! கமலுக்கு?
சென்னை: மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது. அதன்படி, திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலுக்கும் ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ் (பாமக), என்.சந்திரசேகரன் (அதிமுக), எம்.சண்முகம், எம்.முகமது அப்துல்லா, பி.வில்சன், வைகோ (திமுக சாா்பில் தோ்வு செய்யப்பட்டவா்கள்) ஆகிய ஆறு பேரின் பதவிக் காலம் ஜூலை 24-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இதனை முன்னிட்டு, அந்த இடங்களை நிரப்புவதற்கான தோ்தல் ஜூன் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.