இரண்டு நாட்கள் சரிவுக்குப் பிறகு மீண்ட இந்திய பங்குச் சந்தைகள்!
ஆபரேஷன் சிந்தூர் உலக அரங்கை எட்ட வேண்டும்: சுப்ரியா சுலே
ஜோகன்னஸ்பர்க்: பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் காயப்படுத்தியுள்ள நிலையில், ஆபரேஷன் சிந்தூர் உலக அரங்கை எட்ட வேண்டும் என ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடும் போது தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே கூறினார்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த பயங்கரவாத முகாம்களை இந்தியா அழித்தது. இதைத்தொடா்ந்து, இந்தியாவின் எல்லையோர மாநிலங்களை குறிவைத்து பாகிஸ்தானும் ட்ரோன் தாக்குதல் நடத்தியது. பின்னா் அமெரிக்கா தலையீட்டின்பேரில் கடந்த வாரம் சனிக்கிழமை (மே 10) முதல் இருநாடுகளும் சண்டையை நிறுத்திக்கொள்வதாக அறிவித்தன.
இந்நிலையில், பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய நிலைப்பாட்டை உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக அரசியலுக்கு அப்பாற்பட்டு பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 குழுக்களும் அதற்கான தலைவா்களும் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணித்து இந்திய நிலைப்பாட்டை விளக்கி வருகின்றன.
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா சென்றுள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) எம்.பி.சுப்ரியா சுலே தலைமையிலான குழு, ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடினர்.
ஏஎம்சிஏ போர் விமானங்கள்: ரூ.15,000 கோடியில் தயாரிக்க ஒப்புதல்
அப்போது, பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் உலகம் முழுவதும் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் மிகவும் காயப்படுத்தியுள்ளது.
பஹல்காம் என்பது நாம் அனைவரும் கடந்து வந்த மிகவும் அதிர்ச்சிகரமான மற்றும் வேதனையான அனுபவம். பல அப்பாவி மக்களின் உயிர்கள் அழிக்கப்பட்டுள்ளன. இது இந்தியாவின் ஆன்மாவின் மீதான தாக்குதல். எனவே, பயங்கரவாதத்தை நாம் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்ற உண்மையை உலகிற்குச் சொல்ல வேண்டும். இந்தியா ஒருபோதும் போரை தொடங்காத நாடு; நாங்கள் அதற்கு ஆதரவாக நிற்கிறோம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம், ஆனால் எங்கள் கடின உழைப்பாளி மற்றும் அப்பாவி மக்களின் ஆன்மாக்களை இழப்பதில் அல்ல.
இந்தியா பயங்கரவாதத்தை பொறுத்துக்கொள்ளாது, அப்பாவி உயிர்களை தியாகம் செய்யாமல் எப்போதும் அமைதிக்காக நிற்கும் என்பதைக் காட்டுவதற்கு, ஆபரேஷன் சிந்தூர் உலக அரங்கை எட்ட வேண்டும் என்பது பிரதமர் மோடியின் விருப்பம்.
பஹல்காம் சம்பவம் உலகில் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் உலுக்கியபோது தென்னாப்பிரிக்கா இந்தியாவுடன் நின்றதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம் என்று சுலே மேலும் கூறினார்.