செய்திகள் :

புதுக்கோட்டை: மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் பலி; கோயில் திருவிழாவில் சோகம்; என்ன நடந்தது?

post image

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள நாவிச்சிபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர், துளையனூர் பஞ்சாயத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்.

இவரது மகன் உதயம் (வயது: 19). இவர், ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், அருகே உள்ள சோளத்தா கோயிலில் நேற்று மாலை தேரோட்டம் நடைபெற்றது.

தேரோட்டத்திற்கு வரும் பக்தர்களுக்காகக் காலையில் தண்ணீர்ப் பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது அருகே போக்கஸ் லைட் கட்டப்பட்டிருந்த கம்பியில் தெரியாமல் உதயம் கை வைத்துள்ளார். அப்போது, அவர்மீது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.

uthayam
uthayam

இதனையடுத்து, அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில் அங்குப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, உயிரிழந்த கல்லூரி மாணவரின் உடல் உடற்கூறு ஆய்விற்காகப் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து திருமயம் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயில் திருவிழா ஏற்பாட்டின்போது மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

சென்னை: பாதியில் நின்ற தனியார் தீம் பார்க் ராட்டினம்; தவித்த மக்கள்- பத்திரமாக மீட்ட தீயணைப்பு துறை

சென்னையை சேர்ந்த தனியார் தீம் பார்க் ஒன்றில் இன்று மாலை ராட்டினம் பாதியிலேயே தொழில்நுட்ப கோளாறால் நின்றுவிட்டது. இதனால், 30-க்கும் மேற்பட்டோர் அந்தரத்தில் மாட்டிக்கொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம... மேலும் பார்க்க

Kerala : மூழ்கிய கப்பல்; கரை வந்து மோதும் கன்டெய்னர்கள் - கடல் சீற்றத்தால் சிக்கல்?

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து கொச்சி துறைமுகத்துக்கு கடந்த 23-ம் தேதி புறப்பட்டுச்சென்ற எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் கடந்த 24-ம் தேதி கொச்சியில... மேலும் பார்க்க

Kochi Ship Accident: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; கரை ஒதுங்கிய கண்டெய்னர்; கடற்படை சொல்வது என்ன?

கேரள மாநிலம் கொச்சி துறைமுகதில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் கடந்த 24-ம் தேதி விபத்தில் சிக்கிய எம்.எஸ்.சி எல்சா 3 என்ற லைபீரியா சரக்கு கப்பல் நேற்று முழுமையாக மூழ்கியது. கப்பல் கேப்டன் உள்ப்ப... மேலும் பார்க்க

கூடலூர்: காரில் ஆற்றைக் கடக்க முயன்றபோது விபரீதம்; வெள்ளத்தில் சிக்கியவர்களைப் போராடி மீட்ட வீரர்கள்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக இடைவிடாத தொடர் சாரல் மழை பெய்து வருகிறது. காற்றுடன் கூடிய இந்தத் தொடர் மழையால் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சுற்றுலாத் தலங்களும் மூடப்பட்டுள்ளன. ப... மேலும் பார்க்க

ஊட்டி: தலையில் முறிந்து விழுந்த மரம்; பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்.. சோகத்தில் முடிந்த சுற்றுலா

நீலகிரி மாவட்டத்தில் இன்றும் நாளையும் மிதமிஞ்சிய அளவில் மழைப்பொழிவு இருக்கும் என ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் பரவலாக நேற்று காலை முதல் தற்போது வரை பலத்த காற்றுடன் தொ... மேலும் பார்க்க

கொச்சி: கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்; மிதக்கும் கண்டெய்னர்கள்.. - பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரிக்கை

லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி எல்சா-3 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது.... மேலும் பார்க்க