செய்திகள் :

Spirit படத்தில் நடிக்க ரூ.20 கோடி? தீபிகா படுகோனேவுக்குப் பதில் டிம்ரியை ஒப்பந்தம் செய்த சந்தீப்

post image

தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா படுகோனே கர்ப்பமாக இருந்தார். இதனால் படப்பிடிப்பு தாமதமாகிக்கொண்டிருந்தது.

குழந்தை பெற்றுப் படப்பிடிப்புகளில் பங்கேற்க தீபிகா படுகோனே தயாரானபோது வேறு பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இப்படத்தில் நடிக்கத் தனது ரூ.20 கோடி கட்டணம் வேண்டும் என்றும், படத்தில் கிடைக்கும் லாபத்தில் தனக்குப் பங்கு வேண்டும் என்றும், தினமும் 8 மணி நேரம்தான் படப்பிடிப்பில் பங்கேற்பேன் என்றும் தீபிகா படுகோனே நிபந்தனைகளை அடுக்கிக்கொண்டே சென்றார்.

தீபிகா படுகோனே
தீபிகா படுகோனே

அதுவும் தனது ஏஜெண்ட் மூலம் இந்த பேச்சுவார்த்தையை நடத்தினார். மேலும் படப்பிடிப்பு 100 நாட்களுக்கும் அதிகமாகச் சென்றால் சொன்ன கட்டணத்தை விடக் கூடுதலாகக் கொடுக்கவேண்டும் என்றும், ஒவ்வொரு நாளுக்கும் தனித்தனியாகக் கட்டணம் கொடுக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அவரது நிபந்தனைகளைக் கேட்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி அதிர்ச்சியாகிவிட்டார். தீபிகா படுகோனேவிற்கு இப்போதுதான் குழந்தை பிறந்திருக்கிறது. எனவே குழந்தையைக் கவனிக்க ஏதுவாக 8 மணி நேரம்தான் நடிப்பேன் என்று நிபந்தனை விதித்தார்.

இப்படத்தில் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பைத் தொடங்குவதற்கான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தீபிகா படுகோனே ஏற்றுக்கொள்ள முடியாத நிபந்தனைகளை விதித்ததால் அவருக்குப் பதில் புதிய நடிகையைத் தயாரிப்பாளர் தரப்பு தேட ஆரம்பித்தது.

இதில் இந்தியில் வெளியான அனிமல் படத்தில் நடித்த டிரிப்டி டிம்ரியிடம் இயக்குநர் சந்தீப் ரெட்டி பேச்சுவார்த்தை நடத்தினார்.

இப்பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துள்ளது. கோடிகளில் சம்பளமே வாங்காத நடிகை டிரிப்டி டிம்ரிக்கு 6 கோடி சம்பளம் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள்.

Sandeep Reddy vanga
Sandeep Reddy vanga

உடனே வந்த அதிர்ஷ்டத்தை விட்டுவிடக்கூடாது என்று எண்ணி டிரிப்டி டிம்ரி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டார்.

தீபிகா படுகோனே இவ்விவகாரத்தில் பிடிவாதமாக இருந்தது குறித்து இயக்குநர் சந்தீப் ரெட்டி நேற்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் தீபிகா படுகோனேயைச் சாடி ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார்.

பிரச்னைக்குச் சுமுக தீர்வு காண மேற்கொண்ட முயற்சியில் தீபிகா படுகோனே பிடிவாதமாக இருந்ததாக இயக்குநர் சந்தீப் ரெட்டி குற்றம் சாட்டி இருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

``தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு.." - அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த... மேலும் பார்க்க

`இது நம் கடமை துணை நிற்போம்' மறைந்த ராணுவ வீரர்களுக்காக ப்ரீத்தி ஜிந்தா செய்த நற்செயல்

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி வழங்கி இருக்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப ந... மேலும் பார்க்க

Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்கான்; பின்னணி என்ன?

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக்கூடியவர். ஏற்கவே மும்பையில் ஏராளமான அலுவலகங்கள், பிளாட்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து... மேலும் பார்க்க

மும்பை: நடிகர் சல்மான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது.. மடக்கி பிடித்த போலீஸார்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சல்மான்கானை கொலை செய்ய முயற்சி நடந்தது. சல்மான்கான் வீட்டின் மீது குஜராத் ச... மேலும் பார்க்க

KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

Qlமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார் முன்னணி நடிகர் தனுஷ். ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கலா... மேலும் பார்க்க

Ananya Pandey: `கோழி கால்கள், தீக்குச்சி உடல் என கேலி செய்தார்கள்'- ஏளனங்கள் குறித்து அனன்யா பாண்டே

பாலிவுட்டில் 2019ம் ஆண்டு வெளியான `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனன்யா பாண்டே, அவரது தோற்றத்துக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இன்று, முன்னணி நடிகையாக வளர்ந்த... மேலும் பார்க்க