செய்திகள் :

`இது நம் கடமை துணை நிற்போம்' மறைந்த ராணுவ வீரர்களுக்காக ப்ரீத்தி ஜிந்தா செய்த நற்செயல்

post image

பாலிவுட் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது, மறைந்த ராணுவ வீரர்களின் மனைவி, குழந்தைகளுக்காக ரூ.1.10 கோடி வழங்கி இருக்கிறார். மறைந்த ராணுவ வீரர்களின் குடும்ப நல அசோசியேசனுக்கு இந்த நிதியை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

ப்ரீத்தி ஜிந்தா

இதில் பேசிய ப்ரீத்தி ஜிந்தா,''நம் வீரர்களின் துணிச்சலான குடும்பங்களை ஆதரிப்பது நமது பொறுப்பாகும். நம் ராணுவ வீரர்கள் செய்த தியாகங்களை நாம் ஒருபோதும் முழுமையாக ஈடுசெய்ய முடியாது என்றாலும், நாம் அவர்களின் குடும்பங்களுக்கு ஆதரவாக நின்று அவர்கள் முன்னேற உதவ முடியும். நமது வீரர்களைப் எண்ணி நாம் நம்பமுடியாத அளவிற்கு பெருமைப்படுகிறோம். மேலும் தேசத்திற்கும் அதன் துணிச்சலான பாதுகாவலர்களுக்கும் ஆதரவு கொடுப்பதில் உறுதியாக இருக்கிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

இதில் ராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ப்ரீத்தி ஜிந்தா ஐ.பி.எல் பஞ்சாப் அணியின் பங்குதாரராக இருக்கிறார். கார்ப்ரேட் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி திட்டத்தின் கீழ் ஐ.பி.எல் அணியில் கிடைத்த வருமானத்தில் ப்ரீத்தி ஜிந்தா இந்த நிதியை வழங்கியிருக்கிறார்.

``தலைசிறந்த ஆன்மிக நகரில் எனது வீடு.." - அயோத்தி ராமர் கோயில் அருகில் நிலம் வாங்கிய அமிதாப்பச்சன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மும்பையில் பெரிய அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். ஏராளமான வீடு மற்றும் அலுவலகங்களை வாங்கி வாடகைக்கு விட்டிருக்கிறார்.மும்பைக்கு அடுத்த படியாக தனது சொந்த... மேலும் பார்க்க

Spirit படத்தில் நடிக்க ரூ.20 கோடி? தீபிகா படுகோனேவுக்குப் பதில் டிம்ரியை ஒப்பந்தம் செய்த சந்தீப்

தனது ஸ்பிரிட் படத்தில் நடிக்க, பாலிவுட் நடிகை தீபிகா படுகோனேவுடன் தெலுங்கு பட இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.இதில் நடிக்கவும் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டார். அதேசமயம் தீபிகா... மேலும் பார்க்க

Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்கான்; பின்னணி என்ன?

பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக்கூடியவர். ஏற்கவே மும்பையில் ஏராளமான அலுவலகங்கள், பிளாட்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து... மேலும் பார்க்க

மும்பை: நடிகர் சல்மான் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்ற நபர் கைது.. மடக்கி பிடித்த போலீஸார்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பை பாந்திராவில் உள்ள கேலக்ஸி அபார்ட்மெண்ட் என்ற கட்டிடத்தில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சல்மான்கானை கொலை செய்ய முயற்சி நடந்தது. சல்மான்கான் வீட்டின் மீது குஜராத் ச... மேலும் பார்க்க

KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!

Qlமுன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தில் நடிக்கிறார் முன்னணி நடிகர் தனுஷ். ஆதிபுருஷ் படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு கலா... மேலும் பார்க்க

Ananya Pandey: `கோழி கால்கள், தீக்குச்சி உடல் என கேலி செய்தார்கள்'- ஏளனங்கள் குறித்து அனன்யா பாண்டே

பாலிவுட்டில் 2019ம் ஆண்டு வெளியான `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2' திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனன்யா பாண்டே, அவரது தோற்றத்துக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார். இன்று, முன்னணி நடிகையாக வளர்ந்த... மேலும் பார்க்க