வேலூர்: ஆபத்தைச் சுட்டிக்காட்டிய விகடன்... மின் கம்பத்தை விரைந்து சீரமைத்த அதிகா...
Bollywood: நண்பரின் Real Estate நிறுவனத்தில் முதலீடு செய்த அமிதாப்பச்சன், ஷாருக்கான்; பின்னணி என்ன?
பாலிவுட்டில் சூப்பர் ஸ்டார் நடிகராக வலம் வரும் அமிதாப்பச்சன் அதிக அளவில் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யக்கூடியவர்.
ஏற்கவே மும்பையில் ஏராளமான அலுவலகங்கள், பிளாட்களை வாங்கி வாடகைக்கு விட்டு சம்பாதித்து வருகிறார்.
அமிதாப் பச்சன் மகன் அபிஷேக் பச்சனும் தனது தந்தையுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்து வருகிறார். இது தவிர அமிதாப் பச்சன் தனது நண்பனின் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்து இருக்கிறார்.

ஆனந்த் பண்டிட் என்பவர் லோடஸ் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவர் திரைப்படத் தயாரிப்பாளராகவும் இருக்கிறார்.
இவர் கடந்த டிசம்பர் மாதம் தனது கட்டுமான நிறுவனத்திற்குப் பங்குச்சந்தை மூலம் ரூ.400 கோடி திரட்டினார். இதில் அமிதாப் பச்சன் ரூ.10 கோடி அளவுக்கு முதலீடு செய்துள்ளார்.
இது தவிர நடிகர் ஷாருக்கானும் தனது குடும்ப டிரஸ்ட் மூலம் இதே நிறுவனத்தில் ரூ.10.1 கோடிக்கு 6.75 லட்சம் பங்குகளை வாங்கி இருக்கிறார்.
அதோடு நடிகர் ஹ்ரித்திக் ரோஷன், தயாரிப்பாளர் ஏக்தா கபூர், சாரா அலி கான், டைகர் ஷெராப், ராஜ்குமார் ராவ் ஆகியோரும் இந்த கம்பெனியில் முதலீடு செய்துள்ளனர்.
இது குறித்து ஆனந்த் பண்டிட் தனது பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார். அவர் தனது பேட்டியில், "அமிதாப்பச்சன் படங்களைப் பார்த்து வளர்ந்தேன். அவரது திரிசூல் படம்தான் எனக்கு முன்மாதிரியாக இருந்தது. அந்த படம்தான் என்னை அகமதாபாத்தில் இருந்து மும்பை வரும்படி தூண்டியது.
திரிசூல் படத்தில் வரும் அமிதாப்பச்சனின் விஜய் கதாபாத்திரத்தால்தான் நான் இன்றைக்கு இங்கு இருக்கிறேன். அமிதாப்பச்சன் வீட்டுக்கு அருகில் ரூ.50 கோடிக்கு வீடு வாங்கினேன்.

அமிதாப்பச்சன் தனது வீட்டை விரிவுபடுத்த நினைத்தபோது எனது வீட்டை அவருக்கு விற்பனை செய்துவிட்டேன்'' என்றார்.
ஆனந்த் பண்டிட் பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட ஷாருக்கான், "நான் ஆனந்துடன் இரவு 12 மணிக்கு காரில் ஜுகுவைச் சுற்றி வருவேன். எந்தக் கட்டிடத்தையும் இது தனக்குறியது என்று சொல்லமாட்டார்.
ஆனால் இறுதியில் ஒரு சில கட்டிடங்களைத் தவிர மற்ற அனைத்து கட்டிடங்களும் தனக்குறியது என்று சொல்வார்'' என்று சிரித்துக்கொண்டே சொன்னார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...