ஆய்வு செய்த எம்.பி., அரசு அதிகாரிகளைக் கொட்டிய தேனீக்கள்!
மத்தியப் பிரதேசத்தில் அரசுத் திட்டத்தை ஆய்வு செய்த எம்.பி. மற்றும் அதிகாரிகளை தேனீக்கள் கொட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் தமோ மாவட்டத்தின், பதாரியா தொகுதியில், மக்களவை உறுப்பினர் ராகுல் சிங் லோடி, அவரது ஆதரவாளர்கள் மற்றும் அதிகாரிகள் இன்று (மே 22) காலை 11 மணியளவில் சீதாநகர் நீர்பாசனத் திட்டத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது, திடீரென அங்கிருந்தவர்களை தேனீக்கள் கொட்டியுள்ளன. இதனால், அதிகாரிகள், தலைவர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் வெவ்வேறு திசைகளில் ஓடியதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் காலை 11 மணியளவில் அங்குள்ள அணைக்கு அருகில் நடைபெற்றுள்ளது. இதில், அங்கிருந்த பலருக்கும் லேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளன. பின்னர், அந்தத் தேனீக்கள் அங்கிருந்த விரட்டப்பட்டு, அதிகாரிகள் ஆய்வுகளைத் தொடர்ந்தனர்.
இருப்பினும், இதுகுறித்து வெளியான விடியோவில் தேனீக்களிடம் இருந்து தப்பிக்க எம்பி மற்றும் காவல் துறையினர் அங்கிருந்து தப்பித்து ஓடும் காட்சிகள் பதிவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிக்க:தில்லி புழுதிப் புயலில் சிறுமி உள்பட மூவர் பலி!