புதுச்சேரி: `ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கு போலி மதுபானங்கள் தயாராகின்றன!’ – அதிர்ச்ச...
‘மெட்ராஸ் மேட்னி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள புதிய திரைப்படம் “மெட்ராஸ் மேட்னி”.
இந்தப் படத்தின் கதாநாயகனாக காளி வெங்கட் நடித்துள்ளார். மேலும், சத்யராஜ், ரோஷினி ஹரிப்ரியன், ஜார்ஜ் மரியன், சாம்ஸ், ஷெல்லி, கீதா கைலாசம் மற்றும் பானுபிரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பு நிறுவனமான ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் டைட்டில் டீசரில் மே 23 ஆம் தேதியன்று இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களினால் அந்த வெளியீடானது தள்ளிவைக்கப்பட்டது.
அதன் பின்னர், முதல் பார்வை போஸ்டரில், இந்தப் படம் வரும் ஜூன் மாதம் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் வரும் ஜூன் 6 ஆம் தேதியன்று ‘மெட்ராஸ் மேட்னி’ திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன், இசையமைப்பாளர் கே.சி. பாலசரங்கன் இசையமைக்கும் இந்தப் புதிய படத்தின் முதல் பாடலான ’என்னடா பொழப்பு இது’ எனும் பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.