செய்திகள் :

ஒத்திகை செய்யாமல் படப்பிடிப்புக்குச் செல்ல மாட்டேன்: கமல்ஹாசன்

post image

நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு படத்திற்கு நடிப்பு ஒத்திகை செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடித்த தக் லைஃப் திரைப்படம் ஜூன் 5 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நாயகன் படத்திற்குப் பின் கமல் - மணிரத்னம் கூட்டணி இணைந்திருப்பதால் இப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய கமல்ஹாசனிடம், “இதுவரை 230-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்டீர்கள். இப்போதும் ஒத்திகை (ரிகர்சல்) செய்துவிட்டுதான் நடிக்கப் போவீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

அதற்கு கமல்ஹாசன், “ரிகர்சல் செய்யாமல் எந்தப் படப்பிடிப்புக்கும் செல்ல மாட்டேன். படப்பிடிப்பு இல்லையென்றால் நடிப்பு பயிற்சியில்தான் இருப்பேன். கேமராவுக்கு முன்பான நடிப்பைவிட இதுவே எனக்கு பிடிக்கும். ஒத்திகை கண்டிப்பாகத் தேவை. நான் ஒத்திகை செய்யாமலே நடித்துவிடுவேன் என யாராவது சொன்னால், அது தற்பெருமைகூட அல்ல; சில்லறைத்தனம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நாயகன் படப்பிடிப்பு மும்பையில் எத்தனை நாள்கள் நடைபெற்றது தெரியுமா?

‘மெட்ராஸ் மேட்னி’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நடிகர்கள் சத்யராஜ் மற்றும் காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் மணியின் இயக்கத்தில், மெட்ராஸ் ம... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு எப்போது முடியும்? ரஜினி பதில்!

ஜெயிலர் - 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். இதில், கூலி ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிற... மேலும் பார்க்க

லவ் மேரேஜ் படத்தின் புதிய பாடல் வெளியீடு!

நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படமான ‘லவ் மேரேஜ்’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.விக்ரம் பிரபு நடிப்பில் அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கியுள்ள புதிய படம் 'லவ் மேரேஜ்'.இதில், நாயக... மேலும் பார்க்க

நடிகை ஹிமா பிந்துவின் புதிய தொடர்!

நடிகை ஹிமா பிந்து நடிக்கவுள்ள புதிய தொடர் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.சின்ன திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இளைய தலைமுறையினரையும் தொடர்கள் கவர்ந்துள்ளது. க... மேலும் பார்க்க

500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகும் சிங்கப் பெண்ணே தொடர்!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப் பெண்ணே தொடர் 500 நாள்களைக் கடந்து ஒளிபரப்பாகி வருகிறது.சிங்கப் பெண்ணெ தொடர் ஒளிபரப்பாகத் தொடங்கிய சில நாள்களிலேயே நல்ல வரவேற்பைப் பெற்றதால், தொடர்ந்து டி... மேலும் பார்க்க

படை தலைவன் வெளியீட்டில் மாற்றம்!

சண்முக பாண்டியன் நடிப்பில் உருவான படை தலைவன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நடிகர் விஜய்காந்த்தின் மகன் சண்முக பாண்டியன் படை தலைவன் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.ஜகந... மேலும் பார்க்க