செய்திகள் :

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!

post image

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் 19 வயதுக்குட்படோருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (மே 22) அறிவித்துள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த தொடர் வருகிற ஜூன் 24 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இந்த நிலையில், இந்த தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஜேக்கோப் பெத்தேலுக்கு பதிலாக மாற்று வீரரை அறிவித்த ஆர்சிபி!

அணியின் கேப்டனாக சிஎஸ்கே வீரர் ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் 14 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷியும் அணியில் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் போட்டியில் தனது அதிரடியான பேட்டிங் மூலம் கவனம் ஈர்த்ததால், சூர்யவன்ஷி அணியில் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஆயுஷ் மாத்ரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடக்க ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடி வருகிறார். ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு காயம் ஏற்பட்டதால், அணியில் இடம்பெற்ற ஆயுஷ் மாத்ரே அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதுவரை 9 முதல் தர மற்றும் 7 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள மாத்ரே, 962 ரன்கள் குவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடருக்கான இந்திய அணி விவரம்

ஆயுஷ் மாத்ரே (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, விஹான் மல்ஹோத்ரா, மௌல்யராஜ்சிங் சௌதா, ராகுல் குமார், அபிக்யான் குண்டு (துணைக் கேப்டன்), ஹர்வன்ஷ் சிங், ஆர்.எஸ்.அம்பிரிஷ், கனிஷ்க் சௌகான், கிலன் படேல், ஹெனில் படேல், யுதஜித் குஹா, பிரணவ் ராகவேந்திரா, முகமது எனான், ஆதித்யா ராணா, அன்மோன்ஜீத் சிங்.

இதையும் படிக்க: இளம் அதிரடி வீரர்களுக்கு எம்.எஸ்.தோனி வழங்கிய அறிவுரை!

கூடுதல் வீரர்கள்

நமன் புஷ்பக், தீபேஷ், வேதாந்த் திரிவேதி, விகால்ப் திவாரி, அலன்கிரித் ரப்போல்.

எம்பிஎல் டி20 லீக் போட்டிகள் நடைபெறும் இடம், தேதி மாற்றம்!

மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவிருந்த எம்பிஎல் டி20 லீக் தேதி, இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.உலகம் முழுவதும் டி20 கிரிக்கெட்டுகள் பிரபலமாகி வரும் நிலையில் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிலும் டி20 லீக் ப... மேலும் பார்க்க

வங்கதேச தொடர்: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு இடமில்லை!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்டர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் - வங்கதேசம் டி20 தொடர்: 5 போட்டிகள் அல்ல; 3 போட்டிகளாக குறைப்பு!

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் போட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.வங்கதேச அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மே 25 முதல் ஜூன் 3 வரையிலான இடைவெளியில் 5 போட்டிகள் கொண்ட ட... மேலும் பார்க்க

கடைசி ஓவரில் த்ரில்லர்: ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி!

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் வரலாற்று வெற்றி பெற்றுள்ளது. சார்ஜாவில் நடைபெற்ற டி20 போட்டியில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 205/5 ரன்கள் எடுத்தத... மேலும் பார்க்க

ஓய்வு முடிவை திரும்பப் பெற்று ரோஹித், விராட் டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்ற வேண்டும்: முன்னாள் வீரர்

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி அவர்களது ஓய்வு முடிவினை திரும்பப் பெற்று இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டினைக் காப்பாற்ற வேண்டும் என முன்னாள் இந்திய வீரர் யோக்ராஜ் சிங் தெரிவித்துள்ள... மேலும் பார்க்க

10 கிலோ உடல் எடையைக் குறைத்த சர்பராஸ் கான்!

இந்திய வீரர் சர்பராஸ் கான் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்காக 10 கிலோ உடல் எடையைக் குறைத்துள்ளார்.இங்கிலாந்து எதிராக 2024ஆம் ஆண்டு தனது டெஸ்ட் கிரிக்கெட்டை தொடங்கிய இந்திய வீரர் சர்பராஸ் கான் இந்தியாவுக்கு... மேலும் பார்க்க