KALAM: அப்துல் கலாமாக நடிக்கும் தனுஷ் - அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது!
வங்கதேச தொடர்: பாகிஸ்தான் அணியில் பாபர் அசாம், முகமது ரிஸ்வானுக்கு இடமில்லை!
வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணி புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்டர்கள் மற்றும் முன்னாள் கேப்டன்களான பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் அணியிலிருந்து கலட்டிவிடப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலிக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் வெறும் ஒருபோட்டியில் மட்டும் விளையாடியிருந்த ஹசன் அலிக்கு மீண்டும் அணியில் வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இவர் கடைசியாக கடந்தாண்டு டப்ளினில் நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் விளையாடிருந்தார்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் கராச்சி கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஹசன் அலி, இந்தத் தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். அதனால், அவருக்கும் மீண்டும் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஜிம்பாப்வே மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான தொடர்களில் கலட்டிவிடப்பட்ட முகமது ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் இருவரும் இந்தத் தொடரிலும் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் முல்தான் சுல்தான் அணிக்காக இதுவரை 10 போட்டிகளில் விளையாடியிருக்கும் ரிஸ்வான் 367 ரன்கள் குவித்துள்ளார். பாபர் அசாம் 288 ரன்கள் குவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் போலவே இந்தத் தொடரிலும் வழக்கம் போல் சல்மான் அலி அகா கேப்டனாகவும், சதாப் கான் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணி விவரம்
சல்மான் அலி அகா (கேப்டன்), சதாப் கான், அப்ரார் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், ஃபக்கர் ஜமான், ஹாரிஸ் ராவ்ஃப், ஹசன் அலி, ஹசன் நவாஸ், ஹுசைன் தலாத், குஷ்தில் ஷா, முகமது ஹாரிஸ், முகமது வாசிம், இர்பான் கான், நசீம் ஷா, சாஹிப்சாதா, சைம் அயூப்.
இதையும் படிக்க: ஏலத் தொகையில் 31% அபராதமாக அளித்த திக்வேஷ் ரதி..!