செய்திகள் :

Virat Kohli : 'அது ஒரு அவமானம்...' - விராட் கோலியின் ஓய்வு குறித்து பென் ஸ்டோக்ஸ்!

post image

'கோலி பற்றி பென் ஸ்டோக்ஸ்!'

இந்திய அணியின் சூப்பர் சீனியர் வீரரான விராட் கோலி சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்திருந்தார். இந்நிலையில், விராட் கோலியின் ஓய்வு குறித்து இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பேசியிருக்கிறார்.

விராட் கோலி
Virat Kohli - விராட் கோலி

'அது ஒரு அவமானம்...'

அவர் பேசியதாவது, 'விராட் கோலி ஓய்வு முடிவை அறிவித்தவுடன் அவருக்கு மெசேஜ் செய்திருந்தேன். இங்கிலாந்தில் உங்களுக்கு எதிராக ஆடுவதை தவறவிடுவது அவமானம் என்றேன். எனக்கு விராட் கோலிக்கு எதிராக ஆடுவது எப்போதுமே பிடிக்கும். எனக்கும் அவருக்குமான போட்டியை எப்போதுமே விரும்புவேன். ஏனெனில், நாங்கள் இருவருமே ஒரே மனநிலையை கொண்டவர்கள்.

கிரிக்கெட் களத்தை ஒரு போர்க்களம் போன்று பார்ப்போம். அவரின் விடாப்பிடியான குணாதிசயத்தையும் சவாலளிக்கும் திறனையும் இந்திய அணி தவறவிடும். கோலி இங்கிலாந்திலுமே நன்றாக ஆடியிருக்கிறார். அசாத்தியமான வீரர்.

Ben Stokes
Ben Stokes

எல்லா பாராட்டுகளுக்கும் தகுந்தவர். நம்பர் 18 யை அவருக்கான அடையாளமாக மாற்றிவிட்டார். இனி வேறெந்த வீரரையும் அந்த எண் கொண்ட ஜெர்சியோடு பார்ப்போமா என தெரியவில்லை.' என்றார்.

IPL Playoffs : 'மும்பை வென்றால் Qualified; ஒருவேளை தோற்றால்? நாக்அவுட்டில் மோதும் மும்பை, டெல்லி!

'மும்பை vs டெல்லி!'மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று வான்கடேவில் நடக்கவிருக்கிறது. ப்ளே ஆப்ஸில் இன்னும் ஒரே ஒரு இடம்தான் மீதமிருக்கிறது. அந்த ஒரு இடத்துக... மேலும் பார்க்க

IPL 2025 : 'மழையால் மாற்றப்பட்ட விதிமுறை; கொந்தளிக்கும் கொல்கத்தா அணி!' - என்ன நடக்கிறது?

'அச்சுறுத்தும் மழை!'பருவமழைக் காலம் தொடங்கிவிட்டதால் ஐ.பி.எல் இல் திடீரென ஒரு விதிமுறையை மாற்றியிருக்கிறார்கள். அதாவது, மழையால் பாதிக்கப்படும் போட்டிகளுக்கு ஏற்கனவே உள்ள 1 மணி நேரம் கூடுதல் நேரத்தோடு ... மேலும் பார்க்க

Dhoni : 'ஒரு சீசனோட விட்றாதீங்க...' - இளம் வீரர்களுக்கு தோனி அறிவுரை!

சென்னை தோல்வி!ராஜஸ்தான் ராயல்ஸூக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றிருக்கிறது. இந்தத் தோல்விக்குப் பிறகு சென்னை அணியின் கேப்டன் தோனி சில முக்கியமான விஷயங்களை பேசியிர... மேலும் பார்க்க

Digvesh Rathi : '50% ஊதியம் அபராதம்; போட்டியில் ஆட தடை!' - திக்வேஷ் ரதிக்கு தடை விதித்த ஐ.பி.எல்

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை சேர்ந்த பௌலரான திக்வேஷ் ரதிக்கு ஒரு போட்டியில் ஆட தடையும் அபராதமும் விதித்து ஐ.பி.எல் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.Digvesh Rathi & Abhishek Sharmaலக்னோ மற்றும் ஹைதராபாத... மேலும் பார்க்க