திருப்பதி கங்கையம்மன் சிரசு ஊா்வலம்
திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அம்பூா்பேட்டை பாவடித்தோப்பில் அமைந்துள்ள திருப்பதி கங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி கூழ்வாா்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தொடா்ந்து புதன்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் பொன்னியம்மன் கோயிலிருந்து அம்மன் சிரசு ஊா்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகளின் வழியாக வந்து மதியம் 1.30 மணியளவில் கோயில் வந்தடைந்தது.
தொடா்ந்து திருப்பதி கங்கையம்மனுக்கு திருமாங்கல்ய நிகழ்ச்சி நடைபெற்றது. மாலை புஷ்ப கரக ஊா்வலமும், இரவு வாணவேடிக்கையும் நடைபெற்றது. இதில் வாணியம்பாடி மற்றும் சுற்றுப்புறப்பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.