Taj: உலகத்தில் முதல்முறையாக சென்னையில் தாஜ் ரெசிடென்ஸி..!
நமக்கெல்லாம் தாஜ் என்றால் அது ஃபைவ் ஸ்டார் ஓட்டல் என்பதுதான் முதலில் நினைவுக்கு வரும். ஆனால் இனி தாஜ் என்றால் நட்சத்திர அடுக்குமாடி குடியிருப்புகளும் நினைவுக்கு வரும்.
ஆம். சர்வதேச அளவில் முதல் முறையாக தாஜ் பிராண்டட் ரெசிடென்ஸி சென்னையில் அமைய இருக்கிறது. அம்பா குழுமத்துடன் இணைந்து 'தாஜ் ஸ்கைவியூ 'என்னும் பெயரில் இது உருவாகி வருகிறது.

இங்கு 123 அடுக்குமாடி குடியிருப்புகளும், 36 அதி சொகுசு அலுவலகங்களும் மற்றும் 253 ஓட்டல் அறைகளும் கட்டப்பட்டு வருகின்றன. சென்னையின் மையப்பகுதியான நெல்சன் மாணிக்கம் சாலையில் தாஜ் ஸ்கைவியூ கட்டப்பட்டுவருகிறது.
வழக்கமான குடியிருப்புகளை போல் அல்லாமல் இதன் பராமரிப்பு பணிகளை தாஜ் மேற்கொள்ள இருக்கிறது. ஓட்டலில் தங்குவது போலவே 365 நாட்களும் வீட்டில் தங்கலாம், இதுதவிர 75000 சதுர அடி க்ளப் ஹவுஸ் அமைய இருக்கிறது.
தற்போது இதன் கட்டுமான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன. 50 சதவீத வீடுகள், அலுவலகங்கள் ஏற்கனவே விற்றுதீர்ந்துவிட்டன. 2027-ம் ஆண்டு இறுதியில் இதன் ஒட்டுமொத்த கட்டுமான பணிகள் நிறைவடையும்.

உலகெங்கும் பிராண்ட் ரெசிஸிடெண்ஸிகள் பிரபலமாகி வரும் நிலையில், இந்தியாவில் அதன் தொடக்கப்புள்ளியாக சென்னையில் அறிமுகமாகியுள்ளது “தாஜ் ஸ்கைவியூ”.