செய்திகள் :

அமெரிக்காவில் 2 இஸ்ரேலிய தூதர்கள் சுட்டுக் கொலை: `தீவிரவாதத்திற்கு இங்கு இடமில்லை' - ட்ரம்ப் காட்டம்

post image

அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ளது கேபிடல் யூத அருங்காட்சியகம். அங்கு நடந்த விழாவில் இஸ்ரேலிய தூதரக உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

அப்போது விழா நடந்துகொண்டிருந்த இடத்துக்கு வெளியே இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், இஸ்ரேலிய தூதரக உதவியாளர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

அவர்கள் இருவருக்கும் இன்னும் சில வாரங்களில் திருமணம் நடக்கவிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பேசிய வாஷிங்டன் காவல்துறை அதிகாரி, ``பாலஸ்தீனத்துக்குச் சுதந்திரம்' எனத் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் கூச்சலிட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. அவர்கள் கைது செய்யப்பட்டப்பிறகு துப்பாக்கி இருக்கும் இடம் குறித்தும் தகவல் தெரிவித்தனர்.

trump
Donald Trump - டொனால்டு ட்ரம்ப்

இந்தச் சம்பவம் நடந்த 30 நிமிடத்தில், சிகாகோவைச் சேர்ந்த 30 வயதான எலியாஸ் ரோட்ரிக்ஸ் என்ற சந்தேக நபர் கைது செய்யப்பட்டடிருக்கிறார்." எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தத் துப்பாக்கிச் சூடு தொடர்பாக சமூக ஊடகத்தில் எழுதிய அதிபர் ட்ரம்ப், ``இந்தத் தாக்குதல் வெளிப்படையாக யூத எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. இந்த கொடூரமான கொலைகள் இப்போதே முடிவுக்கு வர வேண்டும்! வெறுப்புக்கும் தீவிரவாதத்திற்கும் அமெரிக்காவில் இடமில்லை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல்கள்." எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

``உப்பு தின்றவர்கள் தண்ணீர் குடித்தே ஆகணும்; தவறு செய்தவர்கள்..'' - ED ரெய்டு குறித்து எல்.முருகன்

டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை சோதனைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை சோதனைக்கு தடை விதித்து உத்தரவிட்டிருக்கி... மேலும் பார்க்க

Donald Trump: நிருபர் கேட்ட ஒரே கேள்வி; ``உடனே வெளியே போ.." ஆத்திரத்தில் திட்டிய டொனால்ட் ட்ரம்ப்!

சமீபத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கத்தார் சென்றிருந்தார். அங்கு கத்தாரின் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தானியைச் சந்தித்துப் பேசினார். அப்போது அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு 400 மில்லியன... மேலும் பார்க்க

உங்கள் வீட்டுக் குழந்தைகள் பாரம்பர்ய மிட்டாய்களை சாப்பிடுகிறார்களா?

''சர்க்கரை தூக்கலாக காஸ்ட்லி சாக்லேட்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நம் வீட்டுக் குழந்தைகளுக்கு உடனடி எனர்ஜியையும் உண்மையான ஊட்டச்சத்தையும் தரக்கூடியவை நம் பாரம்பரிய மிட்டாய்கள். அவற்றை குழந்தைகளுக்கு... மேலும் பார்க்க

`காஸாவில் உதவியின்றி 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும்' - ஐ.நா வேதனை; இஸ்ரேலை எச்சரிக்கும் நாடுகள்

சரியான நேரத்தில் காஸாவுக்கு மனிதாபிமான உதவிகள் செல்லவில்லையென்றால் அடுத்த 40 மணி நேரத்தில் 14,000 குழந்தைகள் இறக்க நேரிடும் என ஐ.நா-வின் மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் தெரிவித்திருக்கிறார். நேற்று... மேலும் பார்க்க