‘என் பையனை வளர்த்துவிடுங்க' - விஜய் உயர்வுக்காக உழைத்த SAC - நெகிழ்ந்த இயக்குநர் ஆர்.வி.உதயகுமார்
டிஆர்.பாலா இயக்கத்தில், 'பிக் பாஸ்' வெற்றியாளர் முகேன் ராவ் மற்றும் 'ஜோ' திரைப்பட புகழ் பாவ்யா திரிகா நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் 'ஜின்’.
பால சரவணன், ராதாரவி, இமான் அண்ணாச்சி, வடிவுக்கரசி, நிழல்கள் ரவி ஆகியோர் இப்படத்தில் நடித்திருக்கின்றனர்.
மே 30 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று (மே 22) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், “ சினிமாவிற்குள் ஒருத்தர் வர வேண்டும் என்று நினைத்தால் அவரை யாராலும் தடுக்க முடியாது.
எங்கையோ ஒரு கிராமத்தில் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்த என் அப்பாவுடன் நானும் ஆடு, மாடு மேய்த்துக்கொண்டிருந்தேன். அப்படி இருந்த நான் சினிமாவில் மிகப்பெரிய இயக்குநர் என்ற பெயரைப் பெற்றுவிட்டேன்.
சினிமாவில் ஜெயிக்கணும் என்று தலையில் எழுதியிருந்தால் அதை எவராலும் தடுக்க முடியாது.
ஆரம்பகாலத்தில் விஜய் நடித்த படத்தின் வெற்றி விழா கொண்டாட்டத்திற்கு சென்றிருந்தேன்.
அப்போது அங்கு எஸ். ஏ. சந்திரசேகர் இருந்தார். அவர் விஜய்யை சினிமாவிற்குள் அறிமுகப்படுத்தும்போது எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று எனக்குத் தெரியும்.

‘என் பையனை வளர்த்துவிடுங்கள்’ என்று எல்லா இயக்குநர் வீட்டுப்படிகளையும் அவர் ஏறியிருக்கிறார்.
தான் ஒரு பெரிய இயக்குநர் என்பதை மறந்து அவர் இதையெல்லாம் செய்தார். விஜய்யின் உயர்வுக்கு அவர் தந்தையும் ஒரு காரணம்” என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...