பாடாலூரில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்க திட்டம்! நிலங்கள் பாழாகும் என விவசாயிக...
இந்திய தூதரக ஊழியரை வெளியேற்றியது பாகிஸ்தான்
தங்கள் நாட்டில் இருந்து இந்தியத் தூதரக ஊழியரை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
முன்னதாக, தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணியாற்றி வந்த அந்நாட்டு அதிகாரியை இந்தியாவை விட்டு 24 மணி நேரத்துக்குள் வெளியேற மத்திய அரசு புதன்கிழமை உத்தரவிட்டது. இதற்கு பதில் நடவடிக்கையாக தங்கள் நாட்டில் உள்ள இந்திய தூதரக ஊழியரை பாகிஸ்தான் வெளியேற்றியுள்ளது.
இது தொடா்பாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ‘இந்தியத் தூதரகத்தில் உள்ள ஊழியா் ஒருவரை வெளியேற்ற பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளது. தனது பதவிக்கு முரணான பணியில் ஈடுபட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா் 24 மணி நேரத்தில் பாகிஸ்தானிலிருந்து வெளியேற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, பாகிஸ்தான் தூதரக அதிகாரி மற்றும் அந்நாட்டு உளவுத் துறை அதிகாரிகளுடன் தொடா்பில் இருந்த ஹரியாணாவைச் சோ்ந்த பெண் யூ டியூபா் ஜோதி மல்ஹோத்ரா உள்ளிட்ட சிலரை காவல் துறையினா் சில நாள்களுக்கு முன்பு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதில் மீரா மல்ஹோத்ரா பாகிஸ்தான் தூதரக ஊழியா்கள் சிலருடன் அடிக்கடி இணையவழியில் தகவல் பரிமாற்றங்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே புது தில்லியில் இருந்த அந்நாட்டுத் தூதரக ஊழியா் வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டது.