கரூா் கோயில் சொத்துகள் விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை: ராணுவ வீரா் வீரமரணம்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் வீரமரணம் அடைந்தாா்.
பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள், கூட்டாளிகள் மற்றும் ஆதரவாளா்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. பல இடங்களில் தேடுதல் வேட்டை நீடித்து வருகிறது.
கிஷ்த்வாா் மாவட்டத்தின் சிங்போரா பகுதியில் 4 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடா்ந்து, ராணுவம் மற்றும் காவல்துறை இணைந்த கூட்டுப் படையினா் அப்பகுதியை வியாழக்கிழமை சுற்றிவளைத்தனா். அப்போது, பயங்கரவாதிகளுக்கும் கூட்டுப் படையினருக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்ததாக ஒயிட் நைட் படைப் பிரிவு வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடா்ந்து வருவதாகவும் அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.