செய்திகள் :

சாலை விபத்தில் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் பலி!

post image

மேட்டுப்பாளையம் -குன்னூர் மலைப் பாதையில் நிகழ்ந்த சாலை விபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அவருடன் பயணித்த இருவர் படுகாயமடைந்தனர்.

மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ராஜா. இவரது மனைவி திவ்யபிரியா (28), பல் மருத்துவரான இவர், அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் உறவினர்.

கார்த்திக் ராஜா, திவ்யபிரியா, உறவினர்கள் பரமேஸ்வரி (44), வளர்மதி (48) ஆகியோர் நீலகிரி மாவட்டம், உதகைக்கு காரில் கடந்த 20-ஆம் தேதி சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு தங்கி பல்வேறு இடங்களைக் கண்டுகளித்துவிட்டு உதகையில் இருந்து கார் மூலம் வியாழக்கிழமை மாலை மதுரை திரும்பினர். காரை மதுரையைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் ஓட்டியுள்ளார்.

மேட்டுப்பாளையம் - குன்னூர் மலைப் பாதையில் கல்லாறு அருகே 1-ஆவது கொண்டை ஊசி வளைவு அருகே வந்த போது, கார் திடீரென பிரேக் பிடிக்காமல் சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி நின்றது.

இதில், படுகாயமடைந்த திவ்யபிரியா, பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோரை அப்பகுதி மக்கள் உதவியுடன் கார்த்திக் ராஜா, ஓட்டுநர் பார்த்திபன் ஆகியோர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு திவ்யபிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பரமேஸ்வரி, வளர்மதி ஆகியோருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

இச்சம்பவம் குறித்து மேட்டுப் பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க

கீழடியின் உண்மைக்கு என்றென்றும் எதிரி பாஜக: சு. வெங்கடேசன்

சென்னை: தமிழ்நாட்டின் தொன்மைக்கும், கீழடியின் உண்மைக்கும் என்றென்றும் எதிரி பாஜக என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

நீதி ஆயோக் கூட்டம்: தில்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை காலை தில்லி புறப்பட்டுச் சென்றார்.தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூ... மேலும் பார்க்க

கஞ்சா எண்ணெய் பறிமுதல்: இளைஞா் கைது

சென்னை பெரியமேட்டில் கஞ்சா எண்ணெய் வைத்திருந்ததாக கொடைக்கானலைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா். பெரியமேடு, மைலேடி பூங்கா பகுதியில் போலீஸாா் புதன்கிழமை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போ... மேலும் பார்க்க