செய்திகள் :

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

post image

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதியுடன் கோடை விடுமுறை விடுக்கப்பட்டது.

ஜூன் 1 ஆம் தேதி வரை விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கோடை வெய்யிலை பொறுத்து பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், வெய்யிலின் தாக்கம் குறைந்திருப்பதால் திட்டமிட்டபடி ஜூன் 2 பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.

தற்போது தொடக்கக் கல்வி இயக்ககம் அதனை உறுதி செய்து சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குமாறும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : பாகிஸ்தான் நிராகரிப்பால் ஆலங்கட்டி மழையில் சேதமடைந்த விமானம்: திடுக்கிடும் தகவல்!

அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் திமுக பாடல்! கொந்தளித்த சிறுத்தைகள்!

புதுக்கோட்டையில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதியின் பாடல் ஒலிக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அண்ணல் அம்பேத்கரின் சிலை திறப்ப... மேலும் பார்க்க

மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதால் 3 பேர் பலி!

ராமநாதபுரத்தில் மதுபோதையில் ஷேர் ஆட்டோவை ஓட்டியதில் 3 பலியாகக் காரணமான ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கப்பட்டது.ராமநாதபுரத்தில் செல்லபாண்டியன் என்பவர் ஷேர் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்த நிலையில்,... மேலும் பார்க்க

ஆழியார் அணையில் யானைக் கூட்டம்: சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை!

ஆழியார் அணையில் யானைக் கூட்டம் உலா வருவதால் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது ஆழியார் ... மேலும் பார்க்க

சேலம் ரயில் நிலையத்தில் உள்கூரை விழுந்தது! பயணிகள் தப்பினர்!

சேலம் சந்திப்பு ரயில் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தில் உள்கூரை (ஃபால்ஸ் சீலிங்) திடீரென விழுந்ததால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.இந்தியா முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் முக்கிய ரயி... மேலும் பார்க்க

இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்த 23 குளிர்சாதனப் பேருந்துகள்!

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் 23 புதிய அதிநவீன குளிர்சாதனப் பேருந்துகள் இன்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.இதுகுறித்து போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசின... மேலும் பார்க்க

தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

தில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் வைகை தமிழ்நாடு இல்லத்தின் கட்டுமானப் பணிகளைவெள்ளிக்கிழமை பார்வையிட்டார். தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்... மேலும் பார்க்க