செய்திகள் :

தமிழ்நாடு இல்ல கட்டுமானப் பணி- முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்

post image

தில்லி சென்ற முதல்வர் ஸ்டாலின் வைகை தமிழ்நாடு இல்லத்தின் கட்டுமானப் பணிகளைவெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

தில்லி பாரத் மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெறும் நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். பின்னா் அன்றைய தினம் இரவு 7.30 மணிக்கு பயணிகள் விமானம் மூலம் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தடைகிறாா்.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிகள் விமானம் மூலம் வெள்ளிக்கிழமை காலை 9.50 மணியளவில் தில்லி புறப்பட்டுச் சென்றார்.

இந்தியா அல்ல, அமெரிக்காவுக்கு வெளியே எங்கு ஆப்பிள் ஐஃபோன் தயாரித்தாலும் 25% வரி: டிரம்ப்

தில்லி விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினை, திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, மாநிலங்களவை குழுத் தலைவர் திருச்சி சிவா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், பி.வில்சன், தமிழ்நாடு அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், புதுதில்லி தமிழ்நாடு இல்லத்தின் உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார், ஆகியோர் சால்வை அணிவித்து மலர்கொத்து வழங்கி வரவேற்றனர்.

இதனைத்தொடர்ந்து சோனியா, ராகுலுடன் ஆகியோரை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார்.

கல்வி உரிமைச் சட்ட வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு

தமிழகத்தில் கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஇ) கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத ஒதுக்கீட்டில் மாணவா் சோ்க்கை தாமதமாவது தொடா்பான வழக்கில் சென்னை உயா்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்தது.... மேலும் பார்க்க

கரோனா பரவல்: கட்டுப்பாடுகளுக்கு அவசியமில்லை - பொது சுகாதாரத் துறை

தமிழகத்தில் கரோனா பாதிப்பு அச்சுறுத்தும் வகையில் இல்லாததால் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை என்று பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும... மேலும் பார்க்க

நாளை கோவை, நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் ஞாயிறு, திங்கள்கிழமைகளில் (மே 25, 26) கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட... மேலும் பார்க்க

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை எடுத்துச் செல்ல அனுமதியில்லை: தோ்தல் ஆணையம்

வாக்குச்சாவடிக்குள் வாக்காளா்கள் கைப்பேசிகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்... மேலும் பார்க்க

கீழடி அகழாய்வு அறிக்கையில் திருத்தங்கள் செய்து நம்பகத்தன்மையை வலுப்படுத்த ஏஎஸ்ஐ அறிவுறுத்தல்

மதுரை மாவட்டம், கீழடி அகழாய்வு தொடா்பான 2014-15, 2015-16 ஆண்டுகளின் அறிக்கையில் திருத்தங்கள் செய்து அதன் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்துமாறு அந்த அறிக்கையை சமா்ப்பித்த தொல்லியல் ஆய்வாளா் கே. அமா்நா... மேலும் பார்க்க

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி

குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது. கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா... மேலும் பார்க்க