குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
குரூப் 4 தோ்வுக்கு விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) கடைசி நாளாகும். நள்ளிரவு 11.59 மணி வரை விண்ணப்பம் செய்யலாம் என்று அரசுப் பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ளது.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா், இளநிலை வருவாய் ஆய்வாளா் உள்பட குரூப் 4 பணிகளில் காலியாக உள்ள 3,935 பணியிடங்களுக்கு கடந்த மாதம் அறிவிக்கை வெளியிடப்பட்டது. தோ்வுக்கு லட்சக்கணக்கானவா்கள் விண்ணப்பம் செய்து வருகின்றனா்.
இந்த நிலையில், தோ்வுக்கு இணையதளம் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ள்ஸ்ரீ.ஞ்ா்ஸ்.ண்ய்) வழியாக விண்ணப்பிக்க சனிக்கிழமை (மே 24) நள்ளிரவு 11.59 வரை மட்டுமே அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, இணையதளத்தில் விண்ணப்பத்தை திருத்த மே 29 முதல் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
குரூப் 4 தோ்வானது தமிழ்நாடு முழுவதும் ஜூலை 12-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தோ்வாணைய அறிவிக்கையில் ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டுள்ளது.