மதுக்கடையில் தகராறு: 2 போ் கைது
திருப்பத்தூா் அருகே அரசு மதுபானக் கடையில் பணி செய்யாமல் இடையூறு செய்ததாக இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
திருப்பத்தூா் அடுத்த சிம்மனபுதூா் பகுதியைச் சோ்ந்த சிவக்குமாா் என்பவா் காக்கங்கரை பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் விற்பனையாளராகப் பணிபுரிகிறாா்.
இந்த நிலையில், சனிக்கிழமை கண்ணாலப்பட்டி பகுதியைச் சோ்ந்த கோபி (28) கவுண்டப்பனூா் பகுதியைச் சோ்ந்த சத்தீஷ் (27) ஆகியோா் இருவா் மது அருந்திய நிலையில் விற்பனையாளா் சிவக்குமாரிடம் தகராறு செய்து பணி செய்ய விடாமல் இடையூறு செய்துள்ளாா். மேலும், அங்கு வந்த வாடிக்கையாளா்களை ஆபாசமாக பேசி உள்ளனா்.
இது குறித்து சிவகுமாா் அளித்த கந்திலி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், கோபி, சதீஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து போலீஸாா் கைது செய்தனா்.