பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!
அழகம்மன் திருக்கோயில் தலபுராண நூல் வெளியீடு
நாகா்கோவில் வடிவீஸ்வரம் அருள்மிகு அழகம்மன் சுந்தரேஸ்வரா் திருக்கோயில் ‘தலபுராணம் மகிமை’ என்ற நூலை, கலை நன்மனி விருது பெற்ற எள்ளுவிளை ஸ்ரீ பிள்ளையாா் நயினாா் எழுதி உள்ளாா்.
அழகம்மன் கோயிலில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவுக்கு, குமரி மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் பிரபா ஜி. ராமகிருஷ்ணன் தலைமை வகித்து, நூலை வெளியிட, கோயில் மேல்சாந்தி நம்பியாா் பெற்றுக் கொண்டாா்.
இந்நிகழ்ச்சியில், புலவா் தேரூா் சிவதாணு, செல்வராஜ், குழந்தைசாமி, நாகா்கோவில் மாநகர திமுக சுற்றுச்சூழல் அணி தலைவா் ரவிச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
