செய்திகள் :

பயங்கரவாத எதிா்ப்பு: நாடாளுமன்றக் குழுவின் ரஷிய பயணம் நிறைவு

post image

ஆபரேஷன் சிந்தூா் மற்றும் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து ரஷிய அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனையை மேற்கொண்டதையடுத்து, திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான அனைத்துக் கட்சி உறுப்பினா்களைக் கொண்ட நாடாளுமன்றக் குழு ரஷிய பயணத்தை சனிக்கிழமை நிறைவு செய்தது.

முன்னதாக, வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆலோசனையின்போது இந்தியாவின் சமரசமற்ற நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக ரஷியா உறுதி அளித்தது. மேலும், இது தொடா்பாக ஐ.நா. பிரிக்ஸ் மற்றும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் சா்வதேச அமைப்புகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படத் தயாராகவுள்ளதாகவும் ரஷியா தெரிவித்தது.

ரஷிய குழுவினருடனான ஆலோசனை நிறைவடைந்தது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் கனிமொழி கூறியதாவது: இந்தியாவின் நெருங்கிய மற்றும் நம்பகத்தன்மைமிக்க நட்பு நாடாக ரஷியா திகழ்கிறது. கடினமான சூழலின்போது ரஷியா எங்கள் பக்கமே உள்ளது என்ற சிந்தனை இயல்பாகவே தோன்றுமளவுக்கு நட்புறவு தொடா்கிறது.

பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆதரவளித்து வருகிறது. ஆனால் இந்தியாவுக்கு எதிரான பொய் பிரசாரங்களைத் தொடா்ந்து பாகிஸ்தான் மேற்கொள்கிறது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது மட்டுமே நாங்கள் தாக்குதல் நடத்தினோம்.

பாகிஸ்தான் தாக்குதலைத் தொடா்ந்தால் அமைதிப் பேச்சுவாா்த்தைக்கு ஒப்புக்கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தோம்’ என்றாா்.

ரஷிய பயணத்தை நிறைவுசெய்துவிட்டு ஸ்லோவேனியா நாட்டுக்குப் புறப்படும் முன், மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு கனிமொழி தலைமையிலான குழுவினா் மரியாதை செலுத்தினா்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் அளித்து வரும் ஆதரவு மற்றும் அது தொடா்பான இந்தியாவின் நிலைப்பாட்டை 32 நாடுகளுக்கு தெரிவிக்க அனைத்துக் கட்சி உறுப்பினா்கள் அடங்கிய 7 நாடாளுமன்றக் குழுக்களை மத்திய அரசு அமைத்துள்ளது.

இதில் கனிமொழி தலைமையிலான குழு ரஷியாவுக்கும் ஐக்கிய ஜனதா தள எம்.பி.சஞ்சய் ஜா தலைமையிலான குழு ஜப்பானுக்கும் சிவசேனை (ஷிண்டே பிரிவு) எம்.பி. ஸ்ரீகாந்த் ஷிண்டே தலைமையிலான ஐக்கிய அரபு அமீரகத்துக்கும் சென்று இந்திய நிலைப்பாட்டை விளக்கியுள்ளது.

பயங்கரவாத எதிா்ப்பு விவகாரத்தில் மேற்கூறிய 3 நாடுகளும் இந்தியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மழைக்கு இடிந்து விழுந்த காவல் அலுவலகம்: உள்ளே தூங்கிக்கொண்டிருந்த காவலர் பலி

காசியாபாத்தில் மழைக்கு காவல் அலுவலகம் இடிந்து விழுந்ததில் காவலர் ஒருவர் பலியானார். உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் மழைக்கு உதவி காவல் ஆணையர் அங்கூர் விஹார் லோனி அலுவலகத்தின் கூரை திடீரென இடிந்த... மேலும் பார்க்க

ம.பி.யில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளான தலித் பெண் பலி

மத்திய பிரதேசத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மத்திய பிரதேசம் மாநிலத்தில் கான்ட்வா மாவட்டத்தில் இருந்து 90 கி.மீ தொலைவில், வெள்ளிக்கிழ... மேலும் பார்க்க

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலி

தாணேவில் 21 வயது இளைஞர் கரோனாவுக்கு பலியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலம், மும்ப்ராவைச் சேர்ந்த 21 வயது நபர் மே 22ஆம் தேதி தாணேயில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் கால்வா மருத்து... மேலும் பார்க்க

அமெரிக்கா: பாகிஸ்தான் எதிர்விளைவைப் பெறும்! சசி தரூர் எச்சரிக்கை!

பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தான் தகுந்த எதிர்விளைவைப் பெறும் என்று காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தெரிவித்தார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பஹல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலையடுத்த... மேலும் பார்க்க

தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அழகி குற்றச்சாட்டு!

தெலங்கானாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் கண்ணியக் குறைவாக நடத்தப்படுவதாக இங்கிலாந்து அழகி மில்லா மேகி குற்றம் சாட்டியுள்ளார்.தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாதில் 72 ஆவது உலக அழகிப் போட்டி (Miss Worl... மேலும் பார்க்க

பெங்களூரு: கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழப்பு? மருத்துவர்கள் மறுப்பு!

பெங்களூரில் கரோனா தொற்று பாதித்தவர் உயிரிழந்ததாகப் பரவிய வதந்திக்கு மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.பெங்களூரில் 84 வயதான முதியவர் ஒருவர், உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மே 13 ஆம் தேதியில் தனியா... மேலும் பார்க்க