செய்திகள் :

Dhoni : 'தோனிக்கு கடைசி மேட்ச்சா?' - ஓய்வை பற்றி என்ன சொல்லப்போகிறார்?

post image

'ஓய்வு பற்றி என்ன பேசப்போகிறார்?'

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் இன்று குஜராத் அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் தோனி தனது ஓய்வைப் பற்றியோ எதிர்காலம் பற்றியோ பேச அதிக வாய்ப்பிருக்கிறது. உடல்ரீதியாக தோனி நிறைய சிரமங்களை எதிர்கொண்டு வருவதால் இதுவே தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்கிற கருத்தும் நிலவி வருகிறது. ஓய்வைப் பற்றி தோனி என்னதான் சொல்லப்போகிறார்?

தோனி
தோனி

'டிராக் ரெக்கார்ட்!'

தோனி 2020 ஆம் ஆண்டில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அப்போதிருந்தே அவர் ஐ.பி.எல் இல் எப்போது ஓய்வு பெறுவார் எனும் கேள்வியும் எழத் தொடங்கிவிட்டது. 2020 ஆம் ஆண்டு நடந்த சீசனின் முடிவில் ஓய்வு பற்றிய கேள்விக்கு 'Definitely Not' என பதில் சொல்லியிருந்தார். 2020 சீசன் சென்னை அணிக்கு மிக மோசமான சீசனாக இருந்திருக்கும்.

ஐ.பி.எல் வரலாற்றிலேயே முதல் முறையாக சென்னை அணி ப்ளே ஆப்ஸூக்கு கூட செல்லாமல் வெளியேறியது. அதன்பிறகு 2021 சீசனில் மீண்டும் வந்து கேப்டனாக சென்னை அணியை சாம்பியனாக்கியிருப்பார் தோனி. அந்த சீசனின் முடிவிலும் 'Still I haven't Left Behind' நான் இன்னும் எதையும் விட்டுச் செல்லவில்லை என ஓய்வு முடிவுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பார்.

Dhoni
Dhoni

'சென்னையில்தான் கடைசிப் போட்டி!'

மேலும், சென்னையில்தான் என்னுடைய கடைசிப் போட்டியை ஆடுவேன் என்றும் இந்த சீசனின் முடிவில்தான் தெரிவித்திருந்தார். 2023 சீசனின் முடிவில் கோப்பையை வென்றுவிட்டு, 'நான் ஓய்வு பெற இதுதான் சரியான தருணம். ஆனால், ரசிகர்களுக்காக இன்னும் ஒரு சீசனில் ஆட முயற்சிக்கிறேன்.' என்றார். நடப்பு சீசனின் தொடக்கத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், 'நான் வீல் சேரில் இருந்தால் கூட சென்னை அணியினர் என்னை ஆட வைத்துவிடுவார்கள்.' எனப் பேசியிருந்தார்.

ஒரு சில போட்டிகளுக்கு முன்பாக போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவில் பேசும்போது, 'நான் ஓய்வுபெறப் போகிறேன் என நினைக்கிறார்கள். ஆனால் நவம்பர், டிசம்பர் சமயத்தில்தான் அதைப் பற்றி முடிவெடுக்க முடியும்.' என்றார்.

MS Dhoni
MS Dhoni

இந்த சீசனின் இடையிலேயே தோனி ஓய்வை அறிவிக்கக்கூடும் என்றெல்லாம் சில தகவல்கள் வெளியாகியிருந்தது. அதெல்லாம் வதந்தியாகவே போனது. இன்றைய போட்டியின் டாஸின் போதோ அல்லது போட்டிக்குப் பிறகான பரிசளிப்பு விழாவிலோ தோனி கட்டாயமாக அவரின் ஓய்வைப் பற்றி பேசுவார். என்ன பேசப்போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும், அவர் அடுத்தாண்டு Mentor ஆக வரவாய்ப்பிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

தோனி என்ன முடிவு எடுக்க வேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதைக் கமென்ட்டில் தெரிவியுங்கள்

Shreyas Iyer: `ஸ்ரேயஸை ஏன் தேர்வு செய்யவில்லை' - இந்திய டெஸ்ட் அணி தேர்வு குறித்து சேவாக் கேள்வி

இங்கிலாந்துக்கெதிராக அதன் சொந்த மண்ணில் அடுத்த மாதம் (ஜூன்) 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியின் பட்டியலை பிசிசிஐ நேற்று வெளியிட்டது. இதில், இந்திய புதிய கேப்டனாக சுப்மன் கில்லும... மேலும் பார்க்க

PBKSvsDC: "போட்டி முடிந்த பிறகு கருணிடம் பேசினேன்" - சிக்ஸ் கொடுக்காதது குறித்து ப்ரீத்தி ஜிந்தா

நடப்பு ஐபிஎல் தொடரில் பிளேஆஃப் சுற்றுக்கான நான்கு இடங்களையும் குஜராத், பஞ்சாப், பெங்களூரு, மும்பை ஆகிய அணிகள் பிடித்துவிட்டாலும், அதில் முதல் இரண்டு இடங்களை எந்த அணி பிடிக்கப் போகிறது என்கிற சர்ப்ரைஸ்... மேலும் பார்க்க

Dhoni : 'இறைவனுக்குதான் நன்றி சொல்ல வேண்டும்!' - உடல்நிலை குறித்து தோனி

'குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்!"குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டி அஹமதாபாத்தில் நடந்து வருகிறது. சென்னை அணியின் கடைசி லீக் போட்டி என்பதால் தோனி என்ன... மேலும் பார்க்க

Sarfaraz: வாய்ப்பின் வாசற்படியோடு அனுப்பப்பட்ட சர்ஃபராஸ்; அகர்காரின் சப்பைக்கட்டு; எழும் கேள்விகள்!

ரோஹித்தின் டெஸ்ட் போட்டி ஒய்வைத் தொடர்ந்து, ஜூன் மாதம் இங்கிலாந்துக்கெதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா, கே.எல். ராகுல் போன்ற சீனியர் வீரர்கள் இருந்தாலும் இந்த சுப்மன் கில்தான் தான் இந்திய அணியை வழிநடத்தப் ... மேலும் பார்க்க

CSK : 'இவங்களையெல்லாம் யோசிக்காம தூக்குங்க CSK!' - யார் யார் தெரியுமா?

'சிஎஸ்கேவிலிருந்து வெளியேற்றப்பட வேண்டிய வீரர்கள்!'சென்னை அணிக்கு நடப்பு ஐ.பி.எல் சீசன் கொடுங்கனவாக நிறைவடைய இருக்கிறது. சென்னை ஏலத்தில் எடுத்திருந்ததில் பெரும்பாலும் எந்த வீரரும் நம்பிக்கையளிக்கும் வ... மேலும் பார்க்க

RCB vs SRH : 'போட்டியை மாற்றிய அந்த 5 பந்துகள்!' - எப்படி தோற்றது ஆர்சிபி?

'பெங்களூர் vs சன்ரைசர்ஸ்!'பெங்களூருவுக்கும் ஹைதராபாத்துக்கும் இடையிலான போட்டி நடந்து முடிந்திருக்கிறது. பெங்களூரு அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றிருக்கிறது. 230+ டார்கெட்டை சேஸ் செய்கையில் ஒரு கட்... மேலும் பார்க்க