செய்திகள் :

`ரெட் அலர்ட், ஒரே நாளில் 2 பக்தர்கள் உயிரிழப்பு..' - வெள்ளியங்கிரி மலை ஏற தடை விதித்த வனத்துறை

post image

தமிழ்நாட்டில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கோவை மாவட்டத்தை பொறுத்தவரை மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை நேற்றே அறிவித்துவிட்டது.

பரளிக்காடு

ஆனால், பரளிக்காடு சூழல் சுற்றுலா மற்றும் வெள்ளியங்கிரி மலை குறித்து வனத்துறை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதனால் அந்த இரண்டு பகுதிகளுக்கும் மக்கள் இன்று சென்றனர்.

பரளிக்காடு சென்ற சுற்றுலா பயணிகளை வனத்துறை பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு, மழை காரணமாக சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்துள்ளது. அதேபோல வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கும் தற்காலிக தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.

வெள்ளியங்கிரி மலை

“ரெட் அலர்ட், கனமழை ஆகியவற்றால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு தற்காலிக தடை விதிக்கப்படுகிறது. மலை ஏறியுள்ள  அனைவரும் உடனடியாக கீழே திரும்ப வேண்டும்.” என வனத்துறை கூறியுள்ளது.

அதேநேரத்தில் வெள்ளியங்கிரி மலையில் இன்று ஒரே நாளில் 2 பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. “காரைக்கால் பகுதியைச் சேர்ந்த கௌசல்யா (வயது 45) என்ற பெண் வெள்ளியங்கிரி 7-வது மலையில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.

மரணம்
மரணம்

மேலும், திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 32) என்ற இளைஞர் வெள்ளியங்கிரி ஐந்தாவது மலையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.” என்று வனத்துறை கூறியுள்ளது. இந்தாண்டு மட்டும் தற்போதுவரை வெள்ளியங்கிரி மலை ஏறிய 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

Ooty: தொடர் கனமழை; ஊட்டியில் மூடப்படும் சுற்றுலாத்தலங்கள், தயார் நிலையில் மீட்பு முகாம்கள்!

நீலகிரி மாவட்டத்தில் மிக கனமழைக்கான‌ ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த சில நாள்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு முதல் காற்றுடன்... மேலும் பார்க்க

Rain: கேரளாவில் தொடங்கிய பருவமழை; கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- வெளியான தகவல் என்ன?

கேரளாவில் 8 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.இந்திய வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “வழக்கமாக, தெ... மேலும் பார்க்க

ஈரோடு: விடிய விடிய கனமழை; சாலையில் பெருகி ஓடிய நீர் | Photo Album

ஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்டில் கனமழைஈரோட்... மேலும் பார்க்க

Rain Alert: 'புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி' - வானிலை ஆய்வு மையம் தகவல்

மத்திய கிழக்கு அரபிக் கடலில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு இருக்கிறது என்று வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்திருக்கிறார்.செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய... மேலும் பார்க்க

Rain alert: 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்?

'அய்யய்யோ அக்னி நட்சத்திரம் கொளுத்திவிடுமே' என்ற பயத்தில் இருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு, மழை பெய்து கருணைக் காட்டி வருகிறது. கடந்த சில நாள்களாக, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 'ஜில்' என்று தான் காலை ... மேலும் பார்க்க

Rain: 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அ... மேலும் பார்க்க