செய்திகள் :

Rain alert: 15 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு - எந்தெந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்?

post image

'அய்யய்யோ அக்னி நட்சத்திரம் கொளுத்திவிடுமே' என்ற பயத்தில் இருந்த தமிழ்நாட்டு மக்களுக்கு, மழை பெய்து கருணைக் காட்டி வருகிறது.

கடந்த சில நாள்களாக, தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் 'ஜில்' என்று தான் காலை விடுகிறது. அது இன்னும் கொஞ்சம் நாள்களுக்கு தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தென்மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, நாளை சில மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

மழை
மழை

கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, சேலம், கரூர், நாமக்கல், திருச்சி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

மஞ்சள் அலர்ட் கன மழையை குறிக்கிறது. ஆக, நாளை மேலே குறிப்பிட்டுள்ள மாவட்டங்களில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின் படி, நாளை காலை 8.30 மணி வரை இந்த மாவட்டங்களில் மழை பெய்யலாம்.

இதற்கேற்ற மாதிரி பிளான் பண்ணிக்கோங்க மக்களே!

Rain: 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே, வெயில் வாட்டி வதைத்து வந்தது. தற்போது கோடை வெயில் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அவ்வபோது மழை பெய்து வருகிறது. கடந்த 4 ஆம் தேதி அ... மேலும் பார்க்க

ஊட்டி: 2 மணி நேரம் கொட்டிக் தீர்த்த கனமழை; வெள்ளத்தில் தத்தளித்த வாகனங்கள்!

நீலகிரி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாள்களாக ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பகலில் கனமழை கொட்டித் தீர்த்து வருக... மேலும் பார்க்க

TN Rain: எந்தெந்த மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு? - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு என்ன?

தமிழகத்தில் வரும் 8 ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருந... மேலும் பார்க்க

TN Rain: 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல் என்ன?

தமிழகத்தில் அடுத்த 3 மணிநேரத்துக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. கடந்த சில தினங்களாக கோடை வெயில் அதிகரித்து இருக்கிறது. இதனால் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளா... மேலும் பார்க்க