இங்கிலாந்துக்கு எதிரான அனைத்துப் போட்டிகளிலும் பும்ரா விளையாட மாட்டார்: அஜித் அக...
Rain: கேரளாவில் தொடங்கிய பருவமழை; கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- வெளியான தகவல் என்ன?
கேரளாவில் 8 நாள்கள் முன்கூட்டியே தென்மேற்கு பருவ மழைத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “வழக்கமாக, தென்மேற்கு பருவமழை ஜூன் 1 ஆம் தேதி கேரளாவில் தொடங்கி ஜூலை 8 ஆம் தேதி இந்தியா முழுவதும் பரவக்கூடும்.

இந்த முறை முன்கூட்டியே தொடங்குவதால் வரும் நாள்களில் கேரளா முழுவதும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரிக்கும். கடந்த 16 ஆண்டுகளில், முன் கூட்டியே, தென்மேற்கு பருவமழை தொடங்குவது இதுவே முதல் முறை.
கேரளாவில் தொடங்கி நாடு முழுவதிலும் ஜூலை முதல் வாரத்தில் முழுமையாக பரவக்கூடும். நாட்டின் 80% மழைப் பொழிவு தென்மேற்கு பருவமழை காலத்தில் கிடைக்கிறது” என்று தெரிவித்திருக்கிறது.
தமிழகத்தை பொறுத்தவரை கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் (மே 25,26) ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது, என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தவிர தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் 11- 20 செ.மீ மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.