ரூ.32,000 தள்ளுபடி விலையுடன் சாம்சங் கேலக்ஸி ஸீ ஃபோல்ட் 6!
மடக்கும் வகையிலான மொபைல்களை வாங்க நீண்ட காலமாக காத்திருப்பவர்களுக்கான ஜாக்பாட்டாக சாம்சாங் நிறுவனத்தின் மொபைல் தற்போது ரூ.32,000 வரையிலான சலுகை விலையில் அமேசான் தளத்தில் கிடைக்கிறது.
கூகுள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனான பிக்ஸல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) மற்றும் ஒன்பிளஸ் ஓபன் அபெக்ஸ் எடிஷன் (OnePlus Open Apex Edition) ஆகிய மொபைல்களுக்குப் போட்டியாக தனது ஃபோல்டபிள் மொபைலை சாம்சங் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியுள்ளது.
மடக்கூடிய நல்ல வண்ணங்களில் ஸ்டைலிஷான மொபைல்களை விரும்பக்கூடியவர்களுக்கான இந்த கேலக்ஸி ஸீ ஃபோல்ட் 6 (Samsung Galaxy Z Fold 6) மொபைலில் எக்கச்சக்கமான பயன்பாடுகளுக்கான விருப்பத்தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.
விலை எவ்வளவு?
இந்தியாவில் இந்த சாம்சங் கேலக்ஸி மொபைலின் அதிகாரபூர்வ விலை ரூ.1,64,999 -ஆகவும், அதேவேளையில், அமேசான் தளத்தில் சலுகை விலையுடன் ரூ.1,34,799-யிலும் கிடைக்கிறது.
இதையும் படிக்க: ஆக்சஸ் ரைடு கனெக்ட் புதிய வேரியண்ட்டை அறிமுகம் செய்த சுசூகி!
ஆன்லைன் வர்த்தகத் தளமான அமேசானின் சலுகையில் சுமார் ரூ.30,200 வரை தள்ளுபடி செய்யப்படுகிறது. கூடுதல் சலுகையாக ரூ.2000-மும், பெடரல் வங்கி கிரெடிட் கார்டுக்கு ரூ.2,750-மும் சலுகையாகக் கிடைக்கிறது.
சிறப்பம்சங்கள் என்னென்ன?
இதில், 7.6 அங்குலம் முதன்மை திரையும் 6.3 அங்குலம் கவர் திரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இது டைனமிக் அமோல்டு 2எக்ஸ் பேனலுடன் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஸ் ரேட் கொண்டுள்ளன. இதில், பின்புறம் 3 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
50MP முதன்மை கேமராவும், 12MP அல்ட்ரா வைட் லென்ஸும், 10MP டெலிபோட்டோ ஷூட்டர் கேமராவும், செல்ஃபி எடுக்க 10MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது. ஸ்னாப் ட்ராகன் 8-வது தலைமுறை 3 புரோசஸ்சருடன், 4400mAh டுயல் பேட்டரியில் 25W சார்ஜிங் சப்போர்ட் உள்ளது.
சலுகைக்கு சலுகை!
இந்த மொபல் போனுடன் பல்வேறு விதமான சலுகைகளும் கொடுக்கப்பட்டுள்ளன. உதரணமாக, ரூ.32,999 மதிப்பிலான கேலக்ஸி கைக்கடிகாரம் (Galaxy Watch7) ரூ.29,999-க்கும், ரூ.70,000 மதிப்பிலான கேலக்ஸி கைக்கடிகாரம் அல்ட்ரா (Galaxy Watch Ultra) ரூ. 42,000-க்கும், ரூ.20,000 மதிப்பிலான கேலக்ஸி ஏர்பட்ஸ் (Galaxy Buds3) ரூ. 10,000-க்கும் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: ரூ.11.50 லட்சத்தில் கியா கேரன்ஸ் கிளாவிஸ்! சிறப்பம்சங்கள் என்ன?