சமூக முன்னேற்றத்துக்கு மனித வளம் முக்கியம்: கவிஞா் வைரமுத்து
ரூபாய் மதிப்பு 70 காசுகள் உயர்ந்து ரூ.85.25-ஆக முடிவு!
மும்பை: தொடர்ந்து அந்நிய நிதி வரவு, பலவீனமான அமெரிக்க டாலர் மற்றும் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட சரிவு ஆகிய காரணங்களால், இன்றைய வர்த்தகத்தில் இந்திய ரூபாய் மதிப்பு நவம்பர் 2022க்குப் பிறகு ஒரே நாளில் மிகப்பெரிய உயர்வைக் கண்டது.
வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாய் 85.95 ஆக தொடங்கி வர்த்தகமான நிலையில், பிறகு அதிகபட்சமாக ரூ.85.11 ஆகவும், குறைந்தபட்சமாக ரூ.86.10 ஐ தொட்ட நிலையில், முடிவில் 70 காசுகள் உயர்ந்து ரூ.85.25-ஆக முடிந்தது.
நேற்று (வியாழக்கிழமை) அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் மதிப்பு 36 பைசா குறைந்து 85.95 ஆக நிறைவடைந்தது.
இதையும் படிக்க: சென்செக்ஸ் 760 புள்ளிகளுக்கு மேல் உயர்வு; எஃப்எம்சிஜி, பவர் பங்குகள் ஏற்றம்!