பிளே ஆஃப் சுற்றுக்காக ஆர்சிபி அணியுடன் மீண்டும் இணைகிறாரா ஜோஸ் ஹேசில்வுட்?
பங்குச் சந்தை ஏற்றத்துடன் தொடக்கம்!
இந்திய பங்குச் சந்தை வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) காலை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 9.30 மணி நிலவரப்படி, 411 புள்ளிகள் உயர்ந்து 81,363 ஆக விற்பனையாகி வருகின்றது.
அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 153 புள்ளிகள் உயர்ந்து 24,763 ஆக வர்த்தகமாகி வருகின்றது.
நிஃப்டியைப் பொறுத்தவரை வங்கிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப துறைகள் ஏற்றத்துடன் காணப்படுகிறது.
சென்செக்ஸில் ஐடிசி, இன்ஃபோசிஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல்ஸ், டிசிஎஸ் உள்ளிட்ட பங்குகள் லாபத்துடனும், சன் பார்மா உள்ளிட்ட பங்குகள் சரிவுடனும் வர்த்தகமாகி வருகின்றது.