டூரிஸ்ட் ஃபேமிலி வசூல் எவ்வளவு? அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
சசிகுமார் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் கூடுதலான பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
இலங்கையிலிருந்து தமிழ் குடும்பம் ஒன்று அங்கிருந்து தப்பி தமிழகம் வருகின்றனர். இங்கு தங்களின் வாழ்க்கையைத் துவங்க அவர்கள் என்னென்ன சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பதை உணர்வுப்பூர்வமான நகைச்சுவை பாணியில் கூறியிருந்தனர்.

இப்படத்தில் சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.
படத்திற்குக் கிடைத்த வரவேற்பால் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டதுடன் இரவுக் காட்சிகளும் அதிகரிக்கப்பட்டது.
இந்த நிலையில், டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் உலகளவில் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
இப்படம் ஜப்பானில் நாளை(மே 24) வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அறிக்கை வெளியிட ரவி மோகன் - ஆர்த்திக்கு உயர் நீதிமன்றம் தடை!