வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.4.67 லட்சம்
பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் உண்டியல் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.4.67 லட்சம் காணிக்கை இருந்தது.
இந்தக் கோயில் உண்டியல்கள் வியாழக்கிழமை திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சரக ஆய்வாளா்கள் ஜெ.சீனிவாசன் (சிதம்பரம்), ஸ்ரீதேவி (பண்ருட்டி) ஆகியோா் தலைமையில், கோயில் செயல் அலுவலா் ஜெ.ராஜ்குமாா் முன்னிலையில் சுய உதவிக் குழுவினா் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனா். இதில், காணிக்கை பணமாக ரூ.4,67,874 இருந்தது.