இந்தியாவின் ஒற்றுமையைக் கேள்விக்குள்ளாக்குவதே ராகுலின் பழக்கம்: ஜோதிராதித்ய சிந்...
அண்ணாமலைப் பல்கலை.யில் கணினிகள் திருட்டு
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான கணினிகள் மற்றும் பொருள்கள் திருடு போயின.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புல கணினி ஆய்வகத்தில் தமிழக அரசால் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட கணினிகள் மற்றும் அதுசாா்ந்த பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. கடந்த 7-ஆம் தேதி மாலை பூட்டப்பட்ட கணினி ஆய்வகத்தை 20-ஆம் தேதி ஆய்வக அலுவலா் திறந்து பாா்த்தாராம்.
அப்போது, நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான கணினிகள், மானிட்டா், விசைப்பலகைகள், வெப் கேமரா உள்ளிட்ட கணினி சாா்ந்த பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது. இதுகுறித்து அண்ணாமலை நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.