ஜார்க்கண்ட்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரின் சடலங்கள் மீட்பு
ஜார்க்கண்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் செரைகேலா-கர்ஸ்வான் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலங்களாக மீட்கப்பட்டதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் மேலும் தெரிவித்திருப்பதாவது, கம்ஹரியாவின் சித்ரகுப்த நகரில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கிருஷ்ண குமார் (40), அவரது மனைவி டோலி தேவி (35) மற்றும் இரு மகள்கள் ஆகியோரின் சடலங்கள் தூக்கில் தொங்கிய நிலையில் வெள்ளிக்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டன.
உ.பி.யில் சிறுத்தை தாக்கியதில் 3 பேர் காயம்
கிருஷ்ண குமாருக்கு புற்றுநோய் அண்மையில் கண்டறியப்பட்ட நிலையில் மன அழுத்தத்தில் அவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கம்ஹரியாவில் உள்ள ஒரு எஃகு ஆலையில் குமார் மூத்த மேலாளராக பணியாற்றி வந்துள்ளார்.
விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து கோணங்களிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டனர்.