நீலகிரிக்கு அதிகனமழை எச்சரிக்கை: அதிகாரிகளுடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆலோசனை
பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் தலைமறைவு!
பிரபல பாலிவுட் நடிகர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டுள்ளது.
தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் பிரபலமடைந்த பாலிவுட் நடிகரான அஜாஸ் கான் பிக்பாஸ் - 7 நிகழ்ச்சியில் பங்குபெற்று கவனம் ஈர்த்தார். அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கும் இவர் மீது நடிகை ஒருவர், அஜாஸ் தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி பாலியல் வன்கொடுமை செய்ததாக காவல்துறையிடம் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட மும்பை காவல்துறையினர் அஜாஸ் கானைத் தொடர்புகொள்ள முயற்சித்தனர்.
அதற்குள் தன் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதியப்பட்டதால் மும்பை நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி அஜாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால், வழக்கின் தீவிரம் கருதி நீதிபதி ஜாமீன் மனுவை நிராகரித்துள்ளார். இதற்கிடையே, அஜாஸ் கான் தலைமறைவாகிட்டாராம். தற்போது, மும்பை காவல்துறை அஜாஸ் கானைத் தேடும் பணிகளில் இறங்கியுள்ளனர்.
அண்மை காலமாக பாலிவுட் திரைத்துறையினர் பாலியல் வழக்குகளில் சிக்குவது அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஸ்பிரிட் படத்தில் அனிமல் பிரபலம்!