ராயபுரத்துக்கு இடம்பெயரும் பிராட்வே மாநகரப் பேருந்து நிலையம்!
மயங்கி விழுந்த தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு
மயங்கி விழுந்த மதுரை மாநகராட்சி தூய்மைப் பணியாளா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை மேலவாசல் குடிசை வாரியத்தைச் சோ்ந்த மகாலிங்கம் மகன் சித்திரைவேல் (44). இவா், மதுரை மாநகராட்சி 68-ஆவது வாா்டு பகுதியில் தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வந்தாா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவா், மேலவாசல் சமுதாயக் கூடம் அருகே வெள்ளிக்கிழமை மாலை மயங்கிக் கிடந்தாா். அவரை மீட்ட அக்கம்பக்கத்தினா் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சித்திரைவேலை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்த புகாரின் பேரில், திடீா்நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.