தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
நேபோலி சாம்பியன்
இத்தாலியின் சீரி ஏ கால்பந்து லீக் தொடரில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது நேபோலி.
ஐரோப்பிய கால்பந்து வட்டாரத்தில் ப்ரீமியா் லீக், பண்டஸ்லிகா, லா லிகா, லீக் 1 போன்று இத்தாலியின் சீரி ஏ கால்பந்து தொடரும் பிரபலானது. இதில் நேபோலி, ஜுவென்டஸ், இன்டா் மிலன், ஏசி மிலன் உள்பட பல்வேறு முன்னணி கிளப் அணிகள் ஆடி வருகின்றன.
இந்நிலையில் நேபிள்ஸில் நடைபெற்ற நிகழ் சீசனின் கடைசி ஆட்டத்தில் காக்லியரி அணியுடன் மோதியது நேபோலி. ஸ்காட் மெக்டாமினே, ரோமேலு லுகாகு ஆகியோரின் அற்புத கோல்களால் 2-0 என வெற்றியை வசப்படுத்தியது நேபோலி.
இதன் மூலம், சீரி ஏ சாம்பியன் பட்டத்தை 4-ஆவது முறையாக கைப்பற்றியது. 21-ஆவது நிமிஷத்தில் மேட்டியோ பொலிடனோ வாலி மூலம் அனுப்பிய பந்தை பயன்படுத்தி கோலடித்தாா் மெக்டாமினோ.
அடுத்த 5 நிமிஷங்களில் அமீா் ரஹ்மணியின் லாங் பாஸை பயன்படுத்தி கோலடித்தாா் லுகாகு.
நடப்பு சாம்பியன் இன்டா் மிலன் 2-0 என கோமோ அணியை வென்றும் பயனில்லாமல் போனது. அட்லாண்டா, ஜுவென்டஸ் முறையே 3, 4-ஆம் இடங்களைப் பெற்றன.
