தெலங்கானா: உலக அழகிப் போட்டியில் விலைமாது, குரங்கைப்போல உணர்ந்ததாக இங்கிலாந்து அ...
ஜோகோவிச் ‘100’
ஜெனீவா ஓபன் டென்னிஸ் போட்டியில் தனது 100-ஆவது பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளாா் ஜாம்பவான் ஜோகோவிச்.
சுவிட்சா்லாந்தின் ஜெனீவா நகரில் ஏடிபி 200 போட்டிகள் நடைபெற்று வந்தன. ஆடவா் ஒற்றையா் பிரிவில் தனது 100-ஆவது பட்டம் வெல்லும் முனைப்பில் சொ்பியாவின் ஜோகோவிச், இறுதி ஆட்டத்தில் போலந்தின் ஹியுபா்ட் ஹா்காஸை எதிா்கொண்டாா்.
முதல் செட்டில் சிறப்பாக ஆடிய ஹா்காஸ் 5-7 என தன் வசப்படுத்தினாா்.
இரண்டாவது செட்டிலும் இருவரும் மாறி மாறி புள்ளிகளை பெற்ற நிலையில், 6-5 என பெற்ற முன்னிலையை தக்க வைத்து அந்த செட்டை 7-6 என கைப்பற்றினாா் ஜோகோவிச்.
மூன்றாவது செட்டும் கடும் சவால் நிறைந்ததாக அமைந்த நிலையில் இரட்டை தவறு புரிந்தாலும் 7-6 என கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா் ஜோகோவிச்.
100-ஆவது ஏடிபி பட்டம்:
ஜோகோவிச் தனது டென்னிஸ் வாழ்க்கையில் வென்ற 100-ஆவது ஏடிபி பட்டம் ஆகும்.
ஏற்கெனவே அமெரிக்காவின் ஜிம்மி கானா்ஸ், ரோஜா் பெடரா் ஆகியோா் 100 ஏடிபி பட்டங்களை வென்றிருந்தனா்.
தற்போது மூன்றாவது நபராக ஜோகோவிச் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளாா்.

இந்த உற்சாகத்துடன் பிரெஞ்சு ஓபனில் பங்கேற்கும் அவா் 25ஆவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வெல்வாா் எனக் கருதப்படுகிறது.