துப்பாக்கியால் சுட்டு உயிரை மாய்த்துக் கொண்ட பெண் போலீஸ்.. நாகை ஆட்சியர் அலுவலகத...
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2878 கன அடியாக குறைந்தது.
காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு குறையத் தொடங்கியது.
நேற்று(மே 24) காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 5,725 கன அடி வீதம் நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று(மே 25) காலை வினாடிக்கு 2,878 கன அடியாக குறைந்துள்ளது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று காலை 111.51 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 111.60 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 80.70 டிஎம்சியாக உள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... யார் அகதி? எது தர்ம சத்திரம்?